சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர்கள்.. மக்களே கவனம்.. எச்சரிக்கும் சுகாதாரத் துறை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் பரவி வருகிறது என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அலை 3, அலை 4 என பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தீர்வு என சொல்லப்படுகிறது. அது போல் கொரோனா நெறிமுறைகளையும் மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை இந்தியாவில் டெல்டா, டெல்சிகிரான், டெல்டாகிரான், ஓமிக்ரான், பிஏ ஏ.1, பிஏ ஏ.4 என வகை கொரோனா திரிபுகள் பரவி வருகின்றன.

 மீண்டும் மிரட்டும் கொரோனா.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அதிரடி.. ஏன் முக்கியம் மீண்டும் மிரட்டும் கொரோனா.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அதிரடி.. ஏன் முக்கியம்

டெல்லி, மகாராஷ்டிரா

டெல்லி, மகாராஷ்டிரா

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா 4ஆவது அலை வேகமாக பரவி வந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

இந்த நிலையில் சென்னை ஐஐடிக்கு பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை யாருக்கும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் கூறுகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. இதனால் மற்ற மாவட்ட மக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

மாஸ்க்

மாஸ்க்

பிஏ ஏ4 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. பொது சுகாதார வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க போகிறோம். பொது இடங்களில் மாஸ்க் போடுவதிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐஐடி

ஐஐடி

சென்னை ஐஐடியை பொருத்தவரை 235 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அது போல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் தான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் மறைக்கும் எண்ணம் யாருக்குமே இல்லை. குரங்கு அம்மை நோய் சின்னம்மைக்கு இருக்கும் அறிகுறிகள்தான் இருக்கும். கொப்பளங்கள், காய்ச்சல், புண்கள் ஏற்படுவதுதான் அறிகுறிகள். அதற்காக காய்ச்சலுடன் கையில் புண் இருந்தாலே குரங்கு அம்மை என முடிவு செய்யக் கூடாது. இதை மருத்துவ பரிசோதனைக்குள்படுத்தியே முடிவு செய்ய முடியும் என்றார்.

English summary
TN Health Secretary J Radhakrishnan says that there are 4 districts are becoming Corona clusters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X