ஜெய்பீம்: அக்னி கலசம் புகைப்படம் நீக்கம்! புது காலண்டரில் யார் படமுள்ளது தெரியுமா? மீண்டும் சர்ச்சை
சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது. புதிதாக இடம் பெற்ற படமும் சர்ச்சைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி இணையதளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
1995ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாகண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் கடும் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

அந்தோணிசாமி பெயர் மாற்றம்
நீதிக்காகப் போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். உண்மையிலேயே இந்த வழக்குக்காக ஆஜரான முன்னாள் நீதிபதி சந்துரு பெயரை அவர் படத்தில் சூட்டியிருந்தார் . பாதிக்கப்பட்ட நபர் பெயரையும் அப்படியே திரைப்படத்தில் பயன்படுத்தினர். அதேநேரம் இந்த கொடுமைகளை செய்த காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பெயர் அந்தோணிசாமி என்பது படத்தில் மாற்றப்பட்டு குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டது.

அக்னி கலசம்
மேலும் அந்த சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் 1995ம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஒரு காலண்டர் இருப்பது போலவும் அதில் அக்னி கலசம் புகைப்படம் இடம் பெற்று இருப்பது போலவும் காட்சி அமைப்பு இருந்தது. இதற்கு வன்னியர் சங்கம் , எழுத்தாளர் கண்மணி குணசேகரன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
Recommended Video

இயக்குநர் கவுதமன்
அந்தோணிசாமி என்கிற மிருகம் செய்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது. ஆனால் நீங்கள் அதனையும் தாண்டி அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்துவதென்பது அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்த மாபெரும் தவறு. தவறுதலாக நாட்காட்டி இடம் பெற்றுவிட்டது என படக்குழு சொன்னதாக ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. சிரத்தை எடுத்து அக்கினி குண்டத்தோடு '1995ம் ஆண்டு' என பதிவு செய்து சுவரில் மாட்டப்பட்ட நாட்காட்டி தவறுதலாக வந்துவிட்டது என்று இதற்கு மேலும் உங்களால் எப்படி பொய் சொல்ல முடிகிறது? மேலும் இந்த வழக்கில் நீதி கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதிவரை உயிர் உருக அருகில் நின்ற கோவிந்தன் அவர்கள் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் எப்படி மறந்தீர்கள் அல்லது ஏன் மறைத்தீர்கள்? என்று இயக்குநர் கவுதமன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்தார்.

கிராபிக்ஸ் காட்சி
படத்தின் வசனங்களுக்கு உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், இந்த தவறான சித்தரிப்பை சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். 2 நாட்களில் கிராபிக்ஸ் மூலம் அந்த போட்டோவை மாற்றுவதாக இயக்குநர் தனக்கு உறுதியளித்ததாக கண்மணி குணசேகரன் தெரிவித்தார். இந்த நிலையில்தான், இன்று முதல் புதிய காலண்டர் படம் திரைப்பட காட்சிகளில் வர ஆரம்பித்துள்ளது. புதிதாக இடம்பெற்ற காலண்டர் கிராபிக்சில், லட்சுமி தேவி புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

புது படத்தாலும் சர்ச்சை
இந்த நிலையில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இதை கண்டித்து வருகிறார்கள். கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி பெயர், அந்தோணிசாமி என்பதுதான் வரலாறு. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும்போது அந்தோணிசாமி வீட்டில் எப்படி இந்து கடவுள் காலண்டர் இருக்க முடியும். ஏன் அவரை ஒரு இந்துவாக மாற்றம் செய்தீர்கள் என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த சில நாட்களாக இந்த படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications