ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வர நினைக்கிறாரா விஜய்? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? சாடிய அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வர வேண்டும் என்று தவெக அரசு நினைக்கிறதா என்ற அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கான ஃபர்ஸ்ட் லுக்கை தனது கட்சி எம்எல்ஏ மூலமாக பேச வைத்துள்ளாரா விஜய் என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, எம்எல்ஏ கருப்பையா பேச்சிற்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.

சட்டசபையில் தவெக எம்எல்ஏ கருப்பையா பேசுகையில், சோழவந்தான் தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லை. அரசு சார்பாக மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த வாடிப்பட்டி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. ரூ.50 கோடி இருந்தால், அந்த சர்ச்சரை ஆலையை திறந்து இருக்கலாம்.

Jallikattu

இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு அந்த பணத்தை, இந்த சர்க்கரை ஆலைக்கு கொடுத்திருந்தால், அதனை திறந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர் சமுதாயத்தை சீரழிப்பதாக தவெக எம்எல்ஏ கருப்பையா பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக தரப்பில் தவெகவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டிற்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த "ஏறு தழுவுதல்" பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது எம்எல்ஏ பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!

(பி.கு. Incase you have forgotten, 2017-ல் "இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்'பீட்டா' " என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் விஜய்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினா கடற்கரையில் நடத்திய போராட்டத்தில் விஜய் பங்கேற்று இருந்தார். அதேபோல் மெர்சல் மற்றும் சர்கார் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+