ஜல்லிக்கட்டு போராட்டம் போல.. மிகப்பெரிய போராட்டம் நீட் தேர்வை நீக்க நடக்கும்: திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை: நீட் நுழைவுத் தேர்வை நீக்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தியதை போல மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில், நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் வீட்டில், அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், இன்று அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பாஜகவிற்கு கண்டனம்
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் மரணம் குறித்து, பாஜகவினர் கொச்சைப்படுத்தி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

குடியரசு தலைவர் ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்க மறுக்கும்பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தைப் போல் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக ஆட்சியில் பெயருக்கு தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில், பெயரளவிற்கு, ஒப்புக்குத்தான் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவர்கள் நினைத்திருந்தால், மத்திய அரசுடன் கூட்டணி இருந்த நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆனால் திமுக அரசு இந்த விஷயத்தில் சரியாக செயல்படுகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், நிலைப்பாடு என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்,
உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சந்திக்கும் என்று தெரிவித்தார். தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பாமக கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை தனித்துச் சந்திக்க உ
ள்ளதாக கூறிய நிலையில் திமுக கூட்டணியிலேயே, உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

மெரினா புரட்சி
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது காளையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காட்சிப் பட்டியலில் சேர்த்ததால், தமிழகத்தில் பாஜக ஆட்சி காலத்தில், ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நடந்த தன்னெழுச்சி போராட்டமாகும். இந்த போராட்டம், மெரீனாப் புரட்சி என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறது. அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர். அதேபோன்ற போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications