கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் - குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கொண்டு வரும் திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்று தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று ஜென்மாஷ்டமி விழாவாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. கண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்துணைத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உலகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட பகவான் கண்ணன் அவதரித்தார். குழந்தை கிருஷ்ணனின் பிறப்பு கொண்டாடப்பட வேண்டியது. பால பருவத்தில் செய்த குறும்புகள் மகிழ்ச்சிக்கு உரியது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோல மிட்டு, பால், தயிர், வெண்ணை, பழ வகைகளைப் படைத்து ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
தீய சக்திகளை ஒழிப்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உத்வேகம் தரும் கிருஷ்ணரின் பகவத் கீதை மூலம் நாம் நமது கடமைகளை நேர்மையாக செய்ய வேண்டும். இந்த புனித நாளில் கிருஷ்ணரின் கோட்பாடுகளை கையாண்டு சமுதாயம் மேம்பட பாடுபட வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவி சவீதா கோவிந்த் உடன் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
உங்கள் அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள், என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி நன்னாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க கிருஷ்ணர்! " என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் வாழ்த்து
ஆளுநர் வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியில், தமிழக மக்களுக்கு எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகாவிஷ்ணுவின் 8வது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பு ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. தீய சக்திகளை ஒழிப்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உத்வேகம் தரும் கிருஷ்ணரின் பகவத் கீதை மூலம் நாம் நமது கடமைகளை நேர்மையாக செய்ய வேண்டும். இந்த புனித நாளில் கிருஷ்ணரின் கோட்பாடுகளை கையாண்டு சமுதாயம் மேம்பட பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆளுநர், கிருஷ்ண ஜெயந்தி திருவிழா தமிழகத்தில் அமைதி, ஒற்றுமை, செழிப்பு, சுகாதாரத்தை கொண்டு வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்துச்செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண பகவான், மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழித்தது போலவே, தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயைஅழிக்க அனைவரும் உறுதியேற்போம். இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் என அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உயிர்களை காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

டிடிவி தினகரன் வாழ்த்து
டிடிவி தினகரன் தனது வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த நாளில் கொரோனா பெருந்தொற்றில் இருந்துவிடுபட்டு ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வோம். அத்துடன், பழி பாவங்களுக்கு அஞ்சாமல் அதர்மம் புரிந்தவர்களை திருந்திடச் செய்வதற்கு இந்நாளில் உறுதியேற்போம் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications