எதுக்கு இவங்களுக்கு வீண் முயற்சி.. அரசியலை விட்டு விலகுவதே சரி.. சசிகலாவுக்கு மாஜி அமைச்சர் அட்வைஸ்
சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதுதான் சரி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவை கைப்பற்றும் கடும் முயற்சியில் சசிகலா அண்மைகாலமாக ஈடுபட்டு வந்தார். தனது காரில் அதிமுக கொடியுடன் வலம் வருகிறார். லெட்டர்பேடிலும் அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா பொதுக் குழு கூட்டப்பட்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது.

சசிகலா மனுதாக்கல்
இதை எதிர்த்து சசிகலா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவிற்கு சசிகலா சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையதல்ல என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

சசிகலாவுக்கு எதிரான வழக்கு
இந்த நேற்றைய தினம் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியானது. அப்போது சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுகவுக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை அதிமுகவினர் வரவேற்று கொண்டாடினர்.

சசிகலா கூறியது என்ன?
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா கூறுகையில் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் சசிகலா அரசியலை விட்டு விலகுவதே சரி.

சசிகலாவுக்கு என்ன சம்பந்தம்?
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications