Jio Recharge: விலை குறைந்த பிளானில் 98 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ வழங்கும் செம சூப்பர் ஆஃபர்கள்!
சென்னை: ஜியோ நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000க்கும் குறைவான விலையில் 3 மாத வேலிடிட்டி உடன் சூப்பர் சலுகைகளை வழங்கும் பிளான்களை கொண்டுள்ளது. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிக்கு இடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்கள் புதுப்புது ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தமது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப ஏராளமான ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது. மேலும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான பிளான்களை வழங்குகிறது ஜியோ. அந்தவகையில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 3 மாத வேலிடிட்டி வரும் சூப்பரான 2 பிளான்களை பற்றி பார்க்கலாம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் ரூபாய் 999 விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 GB டேட்டா கிடைக்கும். அதாவது 98 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா என 196 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதனுடன் இந்த பிளானில் 98 நாட்களுக்கும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படும், ஆனால், உங்கள் எரியா 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் மட்டுமே இது பொருந்தும். இதனுடன் இதில் 5G போன் வைத்திருப்பதும் அவசியம்.
மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சப்ஸ்கிரிப்ஷன் 90 நாட்களுக்கு இலவசம். உங்கள் ஜியோ எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்யலாம். ஜியோ ஏ.ஐ கிளவுட் ஸ்டோரேஜ் 50 ஜிபி இலவசம்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் 899 ரூபாயில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 GB டேட்டா கிடைக்கும். மேலும், கூடுதலாக 20 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அதாவது 90 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா+ 20 ஜிபி கூடுதல் டேட்டா என 200 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த கூடுதல் டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த பிளானில் வேலிடிட்டி காலம் முழுவதும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படும், ஆனால், உங்கள் எரியா 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் மட்டுமே இது பொருந்தும். இதனுடன் இதில் 5G போன் வைத்திருப்பதும் அவசியம்.
மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சப்ஸ்கிரிப்ஷன் 90 நாட்களுக்கு இலவசம். உங்கள் ஜியோ எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்யலாம். ஜியோ ஏ.ஐ கிளவுட் ஸ்டோரேஜ் 50 ஜிபி இலவசமாக கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications