லாபமெல்லாம் வேணாம்.. எல்லாம் ஒரு சேவைக்காக தான்! தங்க மோதிரம் 1 பைசாவுக்கு ஏன்? ஜோய் ஆலுக்காஸ் ஓபன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான பணி ஆணை ஜோய் ஆலுக்காஸ் (Joy Alukkas) நிறுவனத்துக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பைசாவுக்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இது தொடர்பாக முதன்முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் ஆலுக்காஸ்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிரை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக அண்ணன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

Joy Alukkas Gold Ring vijay

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு திட்டமாக தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம்

இதற்கான டெண்டரும் விடப்பட்டு தற்போது இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் டெண்டரைக் கைப்பற்றியுள்ளன. 70க்கு 30 என்ற அளவில் இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஒரு பைசாவுக்கு இந்த டென்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியது. செய்கூலி, சேதாரம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஒரு மோதிரத்திற்கு ஒரு பைசாவை மட்டும் இந்த நிறுவனம் 'கோட்' செய்தது.

ஜோய் ஆலுக்காஸ்

இதனால் தான் அந்த நிறுவனத்துக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டது. இதில் ஜி ஆர் டி, டைட்டன், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றபோதும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் அதே ஒரு பைசாவுக்கு நகைகளை செய்து தர ஒப்புக்கொண்டதால் 30 சதவீத பணிகள் அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு பைசா டெண்டர்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்திருந்த நிலையில் அந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனமான ஜோய் ஆலுக்காஸுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பைசாவுக்கு எப்படி பணிகளை செய்ய முடியும் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

தமிழக அரசு

அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் பணி ஆணை வழங்கப்பட்டதிலிருந்து தமிழக அரசு இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக விளக்கம் அளித்திருக்கிறார் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் ஆலுக்காஸ்.

ஜோசப் விஜய்

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்நாட்டின் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். லாப நோக்கத்திற்காக அல்லாமல், சமூகத்திற்குத் திருப்பி அளிக்கும் விருப்பத்தினாலேயே இத்திட்டத்தில் நாங்கள் இணைந்துள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நாங்கள் வழங்கும் ஒவ்வொரு மோதிரமும் தூய்மை, ஹால்மார்க் (Hallmark) தரம் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றுக்கான எங்கள் வாக்குறுதியை நிலைநிறுத்தும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+