• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பஸ்சில் ஏறி.. ஆண் பயணிகளை நெருங்கி.. உரசி.. அதற்கு பிறகுதான் வேடிக்கையே.. இதுதான் பானு ஸ்பெஷல்

|

சென்னை: பஸ்ஸில் ஏறும் பானு.. ஆண்களுக்கு பக்கத்திலேயே நெருக்கமாக, உரசி கொண்டுதான் நிற்பார்.. ஆண்களிடம் பானுதான் முதலில் பேச்சு தருவார்.. கவனத்தை திசை திருப்பிய பிறகுதான் பணம், செல்போனை அவர்களிடம் ஆட்டைய போடுவதுதான் பானுவின் ஸ்பெஷல்!

சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் 2 நாளைக்கு முன்பு கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில், கோயில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. உமா மகேஸ்வரி என்பவரும் சாமி கும்பிட வந்துள்ளார்.

அவரை யாரோ திடீரென இடித்து தள்ளிவிட்டு நகர்ந்துள்ளனர்.. பிறகுதான் ஹேண்ட் பேக்கில் இருந்த செல்போனை காணவில்லை என்பது அவருக்கு தெரிந்து, உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் சொல்லி உள்ளார். அதனடிப்படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவும், அப்போதுதான் சிக்கினார் பானு!

செல்போன்கள்

செல்போன்கள்

40 வயது பெண் பானு.. கல்பாக்கத்தை சேர்ந்தவர்.. சந்தேகத்தின் பேரில் பெண் போலீசார் இழுத்து பிடித்து நிறுத்தவும், தபதபவென செல்போன்கள் இடுப்பிலிருந்து கொட்டின.. முதலில் பானுவின் வயிறு பெரிசாக இருக்கவும் கர்ப்பிணி என்று நினைத்தனர்.. ஆனால், இடுப்பு பகுதியில் ஒரு பையை வைத்து, அதற்குள் திருடிய செல்போன்களை நிரப்பி கொண்டு கோயிலுக்குள்ளேயே வலம் வந்துள்ளார்.

ஹேண்ட் பேக்

ஹேண்ட் பேக்

தீப நாட்களில் இந்த கோயிலில் நல்ல கூட்டம் இருக்கும், பக்தியில் மூழ்கி திளைக்கும்போது ஈஸியா திருடிவிடலாம் என்று கணக்கு போட்டுதான் திருட வந்தாராம் பானு.. அப்படி கண்மூடி சாமி கும்பிட்டவர்தான் உமா மகேஸ்வரி என்ற பெண்.. ஹேண்ட் பேக் ஜிப்பை திறந்து, செல்போன் எடுக்கும்வரை உமா மகேஸ்வரி தீவிரமாக சாமி கும்பிட்டபடியே இருந்தாராம்.. அதனால்தான் ஒரு இடி இடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன் என்று அதிர வைக்கிறார் பானு.

அட்டகாசம்

அட்டகாசம்

இந்த திருட்டிலேயே பல காலம் ஊறி திளைத்தவர் பானு.. நிறைய கேஸ்கள் இவர் மீது உள்ளாம்.. ஜெயிலுக்கு போவது, ஜாமீனில் வருவது பானுவுக்கு சர்வ சாதாரணம் என்கிறார்கள். கோயில் என்று இல்லை.. பஸ்களிலும் பானுவின் அட்டகாசம் அதிகம். ஆண்கள், பெண்கள் என்ற பேதமே இல்லாமல் திருட்டை அரங்கேற்றுவார்.

 செல்போன்கள்

செல்போன்கள்

அதிலும் பஸ்ஸில் ஏறி ஆண்களுக்கு பக்கத்திலேயே உரசி நின்று கொள்வாராம்.. பானுதான் முதலில் ஆண்களிடம் பேச்சு தந்து, கவனத்தை திசை திருப்பி அதற்கு பிறகு பணம், செல்போனை ஆட்டைய போடுவாராம்.. எந்த பொருள் திருடினாலும் அதை கையில் வைத்து கொள்வதில்லை.. உடனே வந்த விலைக்கு விற்றுவிட்டு போய் கொண்டே இருப்பாராம். இப்போதைக்கு பானுவிடம் விசாரணை நடந்து வருகிறது!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
40 year old kalpakkam woman arrested in theft case by chennai police and taking serious investigation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more