சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியுடன் கமல் திடீர் ரகசிய சந்திப்பு.. 45 நிமிடங்கள் ஆலோசனை.. ஆதரவு கேட்டாரா கமல்?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு நடத்தினார்.

தேர்தல் நேரத்தில் தனது நண்பரான ரஜினியை சந்தித்து ஆதரவு கோருவேன் என கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Kamal Haasan met Rajinikanth in his Poes Garden house

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் உடல்நிலை பாதிப்பால் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என கூறிவிட்டார். இதையடுத்து தான் ரஜினிகாந்தை சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் தனக்கு ஆதரவை தருமாறு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வரும் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர போவதில்லை என மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்த நிலையில் இந்த மாத இறுதியில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

ரஜினியை சந்திக்க போவதாக யாரிடமும் கமல்ஹாசன் சொல்லாமல் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியை சந்தித்த கமல்ஹாசன் தற்போது அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Kamal Haasan met Rajinikanth in his Poes Garden house and discussed about 45 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X