முதல்வர் விஜய் மீது அவதூறு பேச்சு! திமுக பெண் கவுன்சிலரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனை, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மேடையிலேயே கண்டித்திருந்தார். மேலும் தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் எஸ்பினேடு போலீஸாரும் அந்த கவுன்சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் அக்டோபர் 17ஆம் தேதி திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்பி அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

joseph vijay kanimozhi

இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த 95 ஆவது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சட்டசபையில் எங்கள் தலைவர் ஸ்டாலினின் அழகை குறை சொல்கிறார்.

ஸ்டாலின்

எங்கள் தலைவருக்கு வயது 74, உங்களுக்கு வயது 52தான்" என கூறிவிட்டு சுதா தீனதயாளன் பேசிய வார்த்தைகள் மிகவும் மோசமாகவும், இழிவாகவும் இருந்தது. இவர் பேச பேச மேடையில் இருந்த மேயர் பிரியாவும், சேகர்பாபுவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

தலைகுனிந்த கனிமொழி

ஆனால் கனிமொழி எம்பியோ அவரது பேச்சால் தலைகுனிந்தபடியே இருந்தார். பின்னர் கனிமொழி பேசிய போது "முப்பெரும் விழா கண்ட கட்சி திமுக என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என இங்கிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நான் கோரிக்கையாக வைக்கிறேன். அவர்களை போல் நாமும் தரம் தாழ்ந்து பேசக் கூடாது" என மேடையிலேயே கண்டித்தார்.

தவெகவினர் கண்டனம்

எனினும் முதல்வர் விஜய்யை பேசும் போது கண்டிக்காமல் பேசி முடித்துவிட்டு கண்டித்ததற்கு தவெக அமைச்சர் கீர்ததனா, எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கீர்த்தனா பதிவு

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.

நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதித்து, திமுக மேடையில் நின்று கொண்டு,நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.

மேயர் பிரியா சிரிப்பதா?

அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். "தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"

மேடையில் நிற்பது பெருமையல்ல

ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP, மேயர் பிரியா, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?

இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்" என தெரிவித்திருந்தார்.

சுதா தீனதயாளனுக்கு சம்மன்

இந்த நிலையில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெக நிர்வாகி உதயகுமார் என்பவர் புகார் கொடுத்ததன் பேரில் எஸ்பிளனேடு போலீஸார் அவர் மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+