சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம்- காத்திருப்பு பட்டியல் போலீஸ் அதிகாரிகளுக்கு திடீரென புதிய பொறுப்பு- கனிமொழி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை மிரட்டியதால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மாலையிலேயே புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

சாத்தான்குளம் நிகழ்வு... 159 ஆண்டுகள் காவல்துறை வரலாற்றில் அவமான சின்னம் -கேரள முன்னாள் டி.ஜி.பி. சாத்தான்குளம் நிகழ்வு... 159 ஆண்டுகள் காவல்துறை வரலாற்றில் அவமான சின்னம் -கேரள முன்னாள் டி.ஜி.பி.

மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் மிரட்டல்

மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் மிரட்டல்

மேலும் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்காமல் மிரட்டல் விடுத்தனர். மகாராஜன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், ஒருமையில் விமர்சித்தார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

போலீஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

போலீஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

இதுவும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில், காலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணையின்போது நீதிபதியை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டி இருந்தால் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்காது என கூறியுள்ளார்.

காத்திருப்பு பட்டியல்- புதிய பொறுப்பு

காத்திருப்பு பட்டியல்- புதிய பொறுப்பு

இந்த நிலையில் இந்த இரு அதிகாரிகளையும் தமிழக அரசு நேற்று காலை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறியது. ஆனால் நேற்று மாலை காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றத்தின் போது இந்த சர்ச்சைக்குரிய அதிகாரிகள் இருவருக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஏ.எஸ்.பி. குமார் நீலகிரி மாவட்டத்துக்கும் பிரதாபன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனிமொழி எதிர்ப்பு

இதுவும் பதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில், காலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணையின்போது நீதிபதியை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டி இருந்தால் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்காது என கூறியுள்ளார்.

English summary
DMK MP Kanimozhi has condemned that Controversial Police officers Transfer in Sathankulam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X