சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழைக்கு இதமாக கபசுர குடிநீர்... நிலவேம்பு கசாயம் - குடித்து டேஸ்ட் பார்த்த அமைச்சர்

மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சித்த மருந்துகள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று கபசுரக் குடிநீரைப் பருகி அவற்றை ஆய்வு செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு வரக்கூடிய நோய்களுக்குத் தமிழ்நாடு முழுவதுமாக 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் டெங்கு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கி மருத்துவ சேவை செய்ய உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 50 வாகனங்கள் மூலம், ஒவ்வொரு வாகனத்திற்கும் 3 மருத்துவர்கள் என 200 வார்டுகளுக்கும் சென்று மழை வெள்ளம், டெங்கு பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவை செய்ய உள்ளனர்.

தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ் கொடுத்தது எப்படி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ் கொடுத்தது எப்படி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனை வளாகத்தில், சித்த மருந்துகள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று கபசுரக் குடிநீரைப் பருகி அவற்றை ஆய்வு செய்தார்.

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கசாயம்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், 'மழை, வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு வரக்கூடிய நோய்களுக்குத் தமிழ்நாடு முழுவதுமாக 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் டெங்கு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கி மருத்துவ சேவை செய்ய இருப்பதாக கூறினார்.

மழை, வெள்ளம் பாதிப்பு

மழை, வெள்ளம் பாதிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 50 வாகனங்கள் மூலம், ஒவ்வொரு வாகனத்திற்கும் 3 மருத்துவர்கள் என 200 வார்டுகளுக்கும் சென்று மழை வெள்ளம், டெங்கு பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவை செய்ய உள்ளனர்.

சித்த மருந்துகள்

சித்த மருந்துகள்

இந்த வாகனங்களில் மூன்று பாத்திரங்களில் 30 லிட்டர் கபசுரக் குடிநீர், 30 லிட்டர் நிலவேம்புக் குடிநீர், மற்றும் மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பெய்ன் பாம், பிண்டத் தைலம், கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரணக் களிம்பு ஆகிய மருந்துகளைப் பொது மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

English summary
Minister Ma Subramaniam has said that 1,560 Indian Medical Centers across Tamil Nadu will provide medical services for dengue and flood-affected areas by providing kapusurak drinking water, groundwater drinking water and medicines for monsoon diseases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X