கரூரில் சாலை போடாமல் ஊழலாம்.. முதல்வரிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்
சென்னை: ‛‛கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். '' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமல் தனியார் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சார்பில் தலைமை செயலரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து நடந்த விசாரணையில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

4 பேர் சஸ்பெண்ட்
அதாவது கரூர் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை, வால்காட்டுப்புதூர் உட்பட 4 இடங்களில் சாலை அமைக்காமலேயே சாலை அமைத்ததாக கணக்கு காட்டி ரூ.3 கோடி வரை முறைகேடு நடந்தது தொடர்பாக கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்னும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சாலை போடாமலேயே திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி டிடிவி தினகரன் தனது ட்விட்டர்பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஸ்டாலின் விளக்கம் அளிக்க...
கரூரில் சாலை போடாமலேயே திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?. இந்த முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், இது ஒரு கூட்டு கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

மலிந்து போன ஊழல்
அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. 'சர்க்காரியா புகழ்' திமுகவினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications