சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இதுதொடர்பான சிபிஐ விசாரணைக்கு விஜ் 3வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தான் கரூர் பிரசாரத்தில் போலீசார் சொன்ன இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாததும், 20 மீட்டர் தள்ளி சென்று பிரசார வாகனம் நின்றதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் விஜயின் பிரசார வாகனம் ஏன் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி 20 மீட்டர் தள்ளி நின்றது? சினிமா படப்பிடிப்புக்காக இந்த செயல் நடந்ததா? என்பது பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இதற்காக விஜய் மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டே பிரசார பயணத்தை தொடங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் இரவில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கரூர் நகர போலீசார் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தவெக பொதுச்செயலாளர், புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டது. இதையடுத்து எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு முதலில் விசாரித்தது. அதன்பிறகு தவெக உச்சநீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை கோரியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜய் உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விஜயிடம் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 3வது முறையாக கடந்த 15ம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
7 மணிநேரம் வரை விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கரூர் பிரசார கூட்டம் திட்டமிடப்பட்டது எப்படி? தாமதமாக வந்தது? உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிபிஐ அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிபிஐ முக்கிய விஷயம் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் தற்போது கரூர் பிரசார கூட்டத்தில் விஜய் தனது பிரசார வாகனத்தை அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. பொதுவாக பெரிய பெரிய பிரபலங்கள் பிரசாரங்கள் செய்யும்போது எந்த இடத்தில் பிரசார வாகனங்கள் நிறுத்த வேண்டும். எப்படி நிறுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் போலீசாரால் வழங்கப்படும். ஆனால் கரூரில் போலீசார் குறித்த இடத்தை தாண்டி விஜயின் பிரசார வாகனம் கடந்து சென்று நின்றுள்ளது. இதனை தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவை கடந்து விஜயின் பிரசார வாகனம் நின்றுள்ளது. ஏற்கனவே அங்கு அதிகளவில் மக்கள் கூடியிருந்த நிலையில், விஜயின் வாகனம் முன்நோக்கி நகர்ந்ததால் மக்கள் பிரசார வாகனத்தை நோக்கி ஓடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணமா?, உயிர் பலி ஏற்பட காரணமாக இருந்ததா? என்று சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் விஜயின் இந்த செயல் தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்ததா? விஜயின் பிரசார வாகனம் போலீசார் குறித்த இடத்தில் நிற்காமல் 20 மீட்டர் தொலைவு வரை தள்ளி சென்று நின்றது? இது எதார்த்தமாக நடந்ததா? இல்லாவிட்டால் தனது கடைசி படப்பிடிப்பின் காட்சிக்காக உள்நோக்கத்துடன் இப்படி செய்யப்பட்டதா? என்பது பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய், சிபிஐயிடம் வசமாக சிக்க வாய்ப்புள்ளது.
-
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா?












Click it and Unblock the Notifications