கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம்.. 3 தங்கம் வென்று அசத்திய சென்னை காசிமேடு கீர்த்தனா
மாலே: மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலக கோப்பை சாம்பியன் தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா.. அதேநேரம் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் காசிமா, மித்ரா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. கடந்த உலக கோப்பையில் தங்கம் வென்ற காசிமா, தற்போது வெண்கலம் வென்றுள்ளார்.
7வது உலக கோப்பை கேரம் போட்டி மாலத்தீவு நாட்டில் உள்ள மாலே நகரில் நடந்து வந்தது. இந்த முறை இந்திய கேரம் அணியில் கீர்த்தனா, கடந்த முறை சாம்பியனான சென்னையைச் சேர்ந்த காசிமா மற்றும் மித்ரா ஆகிய மூன்று வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். இந்த தொடரின் இறுதி போட்டிகள் நேற்று நடந்தது. இதில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா அசத்தியுள்ளது. தமிழக வீரர் வீராங்கனையும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டுககான கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா. மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், என்று இரண்டில் தங்கம் வென்று அசத்தயுள்ளார் கீர்த்தனா. அதேபோல் கீர்த்தனா இடம் பெற்ற அணி தங்கம் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கீர்த்தனா..
கடந்த முறை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை தனிநபர், ஜோடி ஆகிய வேறு வேறு ஆட்டங்களில் தங்கம் வென்றிருந்த சென்னையைச் சேர்ந்த காசிமா, தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். அதேபோன்று குழு போட்டியில் தங்கம் வெல்ல காசிமாவும் காரணமாக இருந்துள்ளார்.
அதேபோல் தமிழக வீராங்கனை மித்ரா, கீர்த்தனா உடன் தனிநபர் போட்டியில் தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக ஏழு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த உலக கோப்பை போட்டியில், ஆண்கள், பெண்கள் சேர்ந்து ஏழு தங்கம், நான்கு வெள்ளி, 3 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications