சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசதியெல்லாம் ஓகே.. சென்னை-பெங்களூர்-மைசூர் வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி சென்னை-மைசூரு இடையே பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்மூலம் வாரத்தில் 6 நாள் சென்னை-மைசூரு இடையே 6 மணிநேரம் 40 நிமிடத்தில் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டண விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் நாட்டில் 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‛வந்தே பாரத்' என்ற பெயரில் அதிவிரைவு ரயில்கள் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உள்நாட்டில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

கடந்த 2019 ல் முதல் முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது வரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இனி பெங்களூர் போகலாம் ஜாலியா! சென்னைக்கு சீறிப் பாயும் வந்தே பாரத்! விமானம் போன்று இவ்வளவு வசதிகளா? இனி பெங்களூர் போகலாம் ஜாலியா! சென்னைக்கு சீறிப் பாயும் வந்தே பாரத்! விமானம் போன்று இவ்வளவு வசதிகளா?

சென்னை-மைசூர் வந்தே பாரத்

சென்னை-மைசூர் வந்தே பாரத்

இந்நிலையில் தென்இந்தியாவில் முதல் ரயிலாகவும், இந்தியாவில் 5வது ரயிலாகவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில் பெங்களூர் வழியாக இயங்கும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வந்தே பாரத் ரயிலை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கட்டண விபரம் என்ன?

கட்டண விபரம் என்ன?

இந்த ரயிலில் பயணிக்க கட்டண விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து மைசூர் செல்ல chair carல் டிக்கெட்டாக ரூ.1,200, executive carல் ரூ.2295 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காட்பாடி செல்ல chair carல் ரூ.495, executive carல் ரூ.950 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் (கேஎஸ்ஆர் பெங்களூர்) செல்ல chair carல் ரூ.995, executive carல் ரூ.1885, பெங்களூரில் இருந்து மைசூர் செல்ல chair carல் ரூ.515, executive carல் ரூ.985ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6 நாட்கள் இயங்கும்

6 நாட்கள் இயங்கும்

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் சென்னை-மைசூர் இடையே இயங்க உள்ளது. சென்னையில் காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 10.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். அதன்பிறகு மதியம் 12.30 மணிக்கு மைசூர் செல்லும். மறுமார்க்கமாக மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 7.35 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த ரயில் இருமார்க்கமாக காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளது.

அதிகபட்சம் 80 கிமீட்டர் வேகம்

அதிகபட்சம் 80 கிமீட்டர் வேகம்

வந்தே பாரத் ரயிலை 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். ஆனால் ரயில் பாதையை சுற்றி உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதததால் முழுவேகத்தில் ரயில் இயக்குவதில் சிரமம் உள்ளது. இதனால் பெங்களூர் -மைசூர் வந்தே பாரத் ரயில் அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது. சராசரியாக 75 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயங்க உள்ளது. சென்னையில் இருந்து மைசூருக்கு தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மைசூரை 7 மணிநேரத்தில் அடைகிறது.

ரூ.200 கட்டணம் அதிகம்

ரூ.200 கட்டணம் அதிகம்

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ஒப்பிடும்போது வந்தேபாரத் ரயிலில் பயணம் செய்தால் 20 நிமிடத்தை மிச்சம் செய்யலாம். இருப்பினும் 20 நிமிடத்தை மிச்சம் செய்ய நினைத்தால் கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் ரூ.200 வரை அதிகமாகும். இதற்கு வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் தான் காரணமாகும். ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைககள் 180 டிகிரி அளவுக்கு சுழலும் வகையில் உள்ளது. சேர் கார் வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. ஆட்டோமேட்டிக் கதவுகள், 34 இன்ச் எல்சிடி டிவி, வைபை வசதிகள் உள்ளிட்ட சொகுசு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi today flagged off the 5th Vande Bharat train service in India between Chennai and Mysore. With this, you can travel between Chennai-Mysore 6 days a week in 6 hours 40 minutes. The ticket fare details for this train are now available.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X