“நல்லா இருக்காரு.. முதல்வரே விசாரிச்சாரு”.. விஎஸ் பாபுவை பார்த்த பின் அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சளி அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக அவரிடம் நலம் விசாரித்தார்" என மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்த பின்பு அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வென்றவர். இந்நிலையில், இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த போது தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Kolathur MLA VS Babu

இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கிரிட்டிக்கல் கேர் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவருக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்கு தேவையான, பொறுத்தமான மற்றும் மருத்துவ மேலாண்மை சுவாச ஆதரவு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் வி.எஸ்.பாபுவுக்கு வயது 75. வயது மூப்பு காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், அவருடைய உடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், விஎஸ் பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

மரிய வில்சன் பேசுகையில், "கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஆரோக்கியமாக உள்ளார். நன்றாகப் பேசினார். அவருக்கு சளி அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் தொலைபேசி வாயிலாக அவரிடம் நலம் விசாரித்துள்ளனர். விரைவில் அவர் நலமுடன் திரும்புவார்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+