ஸ்டாலினுக்கு கொங்கு ஈஸ்வரன் வாழ்த்து!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைவதை தமிழகம் எதிர்பார்த்து காத்திருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலாம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்துவிட்டு இரண்டாம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக அடியெடுத்து வைக்கும் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். முதலாம் ஆண்டில் ஈட்டிய வெற்றியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் பங்கு கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்ற ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற போது, "நான் கருணாநிதி அல்ல ஆனால் முயற்சிப்பதற்கான தைரியம் என்னிடத்தில் இருக்கிறது" என்று குறிப்பிட்டதை நினைவு கூற விரும்புகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக கருணாநிதியைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து அடுத்தகட்ட போருக்கு களத்திலே முன்னேறி கொண்டிருக்கின்ற திமுக தலைவருக்கு வெற்றிவாகை சூடுவீர்கள் என்ற வாழ்த்துகளோடு, வெற்றிக்கு வெகுதூரமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வியூகங்களை வகுத்து எதிர்பார்த்தது போல மிகப்பெரிய வெற்றியை பெற்று அடக்கத்தோடு அடுத்தகட்டத்தை நோக்கி பயணிப்பதை பெருமையோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள். விவசாயமும், தொழில்துறையும் நலிவடைந்து தமிழகம் பொருளாதார சிக்கலில் இருக்கும் போது ஒரு வலிமையான அரசாங்கத்தை, தலைமையை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற எங்களுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications