கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை.. உள்ளாட்சி இடைத் தேர்தல் ரிசல்ட்டை பாருங்கள்: வேட்பாளர் பெருமிதம்
சென்னை: கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி உறுதி செய்திருப்பதாக, ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் மூன்றாவது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், அன்னூரிலுள்ள, தனியார் பள்ளியில் வைத்து எண்ணப்பட்டது.
இதில், திமுக வேட்பாளர் ஆனந்தன் 26,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர்
இதை திமுகவினர் கொண்டாடினர். பின்னர் பேட்டியளித்த ஆனந்தன், கொங்கு மண்டலம் மீண்டும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.

கோட்டையான கொங்கு மண்டலம்
இதுகுறித்து அவர் கூறுகையில், கொங்கு மண்டலம் மீண்டும் திமுகவின் கோட்டை என்பது உறுதியாகியுள்ளது. கொங்கு மக்கள் திமுகவை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிற கட்சிகளுக்கு டெபாசிட் இல்லை
அதிமுக சார்பில் கருப்பசாமி 13251 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தனர். திமுக வெற்றி பெற்றதை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த மகேந்திரன் திமுகவில் சேர்க்கப்பட்டார். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இது போன்ற விஷயங்கள் அதிமுகவுக்கு பின்னடைவையும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications