ஒன்றியம் வார்த்தை தவறானது.. கொங்கு நாடு விஷயத்தில் மத்திய அரசு முடிவு இதுதான்..ஹெச் ராஜா திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு எனத் தனியாக ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதாக விவாதம் எழுந்துள்ள நிலையில், ஒன்றியம் என்பதற்குப் பதிலடியாகவே கொங்கு நாடு சொல்லாடல் தோன்றியுள்ளதாகவும் இது குறித்து மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை மட்டும் பிரித்து தனியாகக் கொங்கு நாடு என்ற மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாதம் எழுந்தது.

இந்நிலையில், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள பிரபல தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. இது மிகப் பெரியளவில் விவாதமானது.

ஹெச் ராஜா

ஹெச் ராஜா

இந்தச் சூழலில் கொங்கு நாடு விவாதம் ஏன் தோன்றியது என்று பாஜக செய்யச் செயலாளர் ஹெச் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, இந்தியா நிர்வாக வசதிக்காக மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விஷயம். ஆனால், இந்த ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளை மக்கள் மனதில் திணிக்கும் வகையில் மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் தான் இந்தியா என திமுக தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

மத்திய அரசு முடிவு

மத்திய அரசு முடிவு

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கொங்குநாடு என்று சொல் தோன்றியுள்ளது.ஒன்றியம் எனச் சொல்லி வருவது பிரிவினைவாதம் என்றும் அதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் இதுபோல கொங்கு நாடு என்ற கோஷத்தை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் இது குறித்து மத்திய அரசோ அல்லது பாஜகவே எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

Recommended Video

    மிக முக்கியமான Co-Operative இலாகாவை கையில் எடுத்த Amit Shah | Oneindia Tamil
    பெட்ரோல் டீசல் விலை

    பெட்ரோல் டீசல் விலை

    தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்குத் தலைவராக ஐ லியோனியை நியமித்துள்ளனர். திமுகவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த உத்தரவை முதல்வர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி-இல் வந்தால் விலை பெரிய அளவில் குறையும். தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செல்பவர், மக்கள் மீது அக்கறை இருந்தால் முதலில் இது குறித்துப் பேசட்டும். இது பற்றி தவறான தகவல்களை மக்கள் மத்தியில் திணிக்க முயல்பவர்களுக்கு பாஜக தக்க பதிலடி கொடுக்கும்" என்று அவர் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+