'கொங்குநாடு சர்ச்சை' .. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடம்பூர் ராஜுவின் பளிச் பதில் இதுதான்!
சென்னை : கொங்கு மண்டல சர்ச்சை குறித்து ஊடகங்களின் யூகத்திற்கு பதிலளிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்று கூறினார். அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

கடும் விவாதம்
இந்நிலையில் கொங்குநாடு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடந்து வருகிறது இந்நிலையில் கொங்கு மண்டல சர்ச்சை குறித்து ஊடகம் மற்றும் பத்திரிகை துறையின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.

பதிலளிக்க முடியாது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அலுவலகத்தை திறந்து வைக்க வந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தற்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வரும் கொங்கு மண்டல சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த பேசிய அமைச்சர் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என கூறிவிட்டு வேகமாக கிளம்பி சென்றார்

மரியாதை
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் மணி மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 311 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆட்சிபொறுப்பில் இல்லை
பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும் போது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எனவே அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும் என்றார்.

ஆயிரம் ரூபாய் உதவி
சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாக பேசிய கடம்பூர் ராஜூ தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் நடந்தன. இதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆணித்தரமான கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம். கிடைத்த இரண்டு நாட்களில் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தோம். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முயலை விட வேகமாக அதிமுக செயல்படும்" என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications