கொங்குநாடு.. மௌனம் காக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்.. இவ்வளவு தயக்கம் ஏன்?
சென்னை : தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தினசரி போட்டிபோட்டுக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிடும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதுவரை கொங்குநாடு சர்ச்சை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்று கூறினார். அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

கடும் விவாதம்
இந்நிலையில் கொங்குநாடு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடந்து வருகிறது இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பட்டும்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அலுவலகத்தை திறந்து வைக்க வந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வரும் கொங்கு மண்டல சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தங்கமணி, ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என கூறிவிட்டு வேகமாக கிளம்பி சென்றார்

மலுப்பல்
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய கடம்பூர் ராஜூ நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எனவே அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும் என்று மழுப்பான பதிலை கூறினார். அமைச்சர் ஜெயக்குமாரோ கொங்குநாடு குறித்த சர்ச்சைக்கு " கொங்கு நாடு கோரிக்கையை கருத்து சுதந்திரமாக பார்க்கிறோம்" என்று கூறி அதிரவைத்தார்.

நல்லதல்ல
இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி மட்டுமே கடுமையாக பதிலடியை பாஜகவிற்கு கொடுத்துள்ளார். அவர் கூறும் போது, கொங்கு நாடு என்று சிந்தனையில் இறங்குவது நாட்டுக்கு நல்லதல்ல. அந்தக் கருத்தை யாா் தெரிவித்தாலும் அதைத் தவிா்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அறிவியல் உலகத்தில் உலகமே ஒரு சிறு கைக்குள் இருக்கின்ற நிலையில் சிறு, சிறு மாநிலங்களாக பிரிகின்றபோது அதன் மதிப்பு குறையும் என்பது எனது கருத்து.

தனிநபரின் கருத்து
கொங்கு நாடு என்ற தனிநபரின் கருத்தை அவா் சாா்ந்த கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்ளுமா என்பது கூட தெரியவில்லை. ஒரு தனிநபரின் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை உள்ள அனைத்து மக்களும் இது தமிழ்நாடு என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனா். அப்படி ஒரு சிந்தனையில் வாழும் மக்களின் மனதில் கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை தூவ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று கேபி முனுசாமி கூறினார்,

இபிஎஸ்
அதிமுக தலைவர்களில் கேபி முனுசாமியை தவிர யாருமே இதுவரை யாருமே கொங்குநாடு குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தினசரி போட்டிபோட்டுக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிடும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதுவரை கொங்குநாடு சர்ச்சை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபத்தானது
மாநிலத்தின் ஒருபகுதியை பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை திமுக கடுமையாக எதிர்க்கும் சூழலில் ஒபிஎஸ், இபிஎஸ் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது நல்லது அல்ல என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். இந்த அணுகுமுறை அதிமுகவின் எதிர்காலத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்து என்றும் அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே வெளிப்படையாக ஓபிஎஸ், இபிஎஸ் இந்த விவகாரத்தில் தெளிவான பதிலடி கூற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மிரட்டலாக பார்க்கப்படுகிறது
அதேநேரம் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதே இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் கரு.நாகராஜனை தவிர யாருமே கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை குறித்து பேசவில்லை. இந்த சூழலில் மத்தியில ஆளும் பாஜக தனது நிலைப்பாடு என்னவென்பதை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரைவந்த கருத்துக்களை பார்த்தால் ஒன்றிய அரசு என்று சொன்ன திமுகவை சீண்டுவதற்காக மட்டுமே கொங்குநாடு என்ற மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் கொங்குநாடு என்ற வாதம் தனிமாநில கோரிக்கையை மாறுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனினும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தடுப்பூசி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற மற்ற விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே கொங்குநாடு விவகாரம் எழுப்பப்பட்டதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications