கோயம்பேடு போச்சே.. கிளாம்பாக்கத்தில் "இது" வேறயா? "களமாக" மாறுது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு.. பரபர
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் போராட்டத்தையே நடத்தும்அளவுக்கு சென்றுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளும் இதில் நுழைந்துள்ளன.
சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. கடந்த வருடமே இந்த பஸ் ஸ்டாண்டை திறப்பதாக சொன்னார்கள்.. ஆனால், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து வந்ததால், பொங்கலுக்கு திறக்கப்பட்டது.

வசதிகள்: ஆனால், பஸ் ஸ்டாண்ட திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் எல்லா பஸ்களையும் முன்பதிவு செய்து நிரம்பி வழிந்ததால், ரிசர்வ் செய்யாதவர்களை ஏற்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பல மணி நேரம் காத்து நின்றனர். பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து விடியவிடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்: பஸ்கள் இல்லாமல், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பிளாட்பார்ம்களிலும், பஸ் ஸ்டாப்களிலும் படுத்து தூங்கும் நிலைமையும் ஏற்பட்டது. போதுமான பஸ்கள் இல்லாததற்கு போக்குவரத்து துறை விளக்கமும் தந்திருந்தது.. ஆனாலும், பல மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், 2வது நாளாக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "நள்ளிரவு நேரத்தில் வருவோர் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்... கிளாம்பாக்கத்தில் போதிய பஸ்கள் இல்லை என்று செய்தி பரப்புகின்றனர். இப்படி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.. போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது" என்றார்.
தேவையற்ற குழப்பம்: எனினும், பொதுமக்களின் வேதனை தொடர்கிறது.. கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டபோது, தாங்கள் இப்படியெல்லாம் பிரச்சினைகள் சந்திக்கவில்லை.. மாறிமாறி செல்ல வேண்டிய நிலை வந்திருக்கிறது.. கிளாம்பாக்கத்தில் ஓட்டல்கள் குறைவாக இருக்கிறது.. விலையும் அதிகமாக இருக்கிறது... கோயம்பேட்டில் இப்படியெல்லாம் இல்லையே" என்று பயணிகள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படவில்லை என்பதே பெரும்பாலான பயணிகளின் குற்றச்சாட்டாக வைக்கப்படுகின்றது.
சென்னை: காரணம், சென்னையை பொறுத்தவரை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த நாட்களில் அதிகப்படியான பஸ்களை இயக்க வேண்டியது கட்டாயமுள்ளது. எனவே, சென்னையில் தங்கியிருக்கும் பெரும்பாலான, வெளியூர்வாசிகள் நம்பி இருப்பது அரசு பஸ்களைதான்.. எனவே அரசு இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மற்றொருபக்கம், ஆம்னி பஸ் டிரைவர்கள், ஊழியர்களுக்கு போதுமான குளியல் அறை வசதிகளும் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.. இதனால், பஸ் ஸ்டாண்டில், நடைமேடையிலேயே திறந்தவெளியில், பக்கெட்டுகளை வைத்து பஸ் ஊழியர்கள் குளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்: இதனால், பஸ் ஸ்டாண்டு முழுக்க ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலைமை ஏற்படுவதால், இது பயணிகளுக்கு மிகுந்த அவதியை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.
போதாக்குறைக்கு கிளாம்பாக்கம் போராட்டம், அரசியல் களத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.. அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் கிளாம்பாக்கம் விவகாரத்துக்கு கண்டனதையும், கோரிக்கையையும் தமிழக அரசுக்கு விடுத்து வருகிறார்கள்.. "கலைஞர்" பெயரை பஸ் ஸ்டாண்டுக்கு வைக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படி முன்கூட்டியே அவசர கதியில், கிளாம்பாக்கம திறக்கப்பட்டள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
கிளாம்பாக்கம்: விரைவில் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை எச்சரித்திருக்கிறார்.. ஓரிருநாள் அல்லது ஒரு வாரம் என்றால் பரவாயில்லை.. இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பிரச்சனை தினமும் அதிகமாகி கொண்டே போவது சரிகிடையாது என்று டாக்டர் கிருஷ்ணசாமியும் கொந்தளித்துள்ளார்..
இது தேர்தல் நேரம் என்பதால், அரசுக்கு எதிரான பிரச்சாரங்களையும் முன்னெடுக்கும் களமாக கிளாம்பாக்கம் உருவெடுத்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் பயணிகளின் ஆவேசம் + மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் என இரட்டை சவால் திமுக அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.. எனவே, இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கிளாம்பாக்கத்துக்கு ஒரு முடிவையும், நல்ல விடிவையும் தமிழக அரசு பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications