சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?.. 4 நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும்.. குஷ்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Udhayanidhi Stalin-க்கு khushboo சவால் | Oneindia Tamil

    தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையில் பாஜக நிர்வாகி குஷ்பு சுந்தர் நிருபர்களிடம் பேட்டியின் போது கூறியதாவது :-

    அதிமுகவுடன் பாஜக கூட்டணியா, பாஜகவுடன் அதிமுக கூட்டணியா என்ற கேள்விக்கு மூக்கை இப்படி பிடித்தாலும் ஒன்றுதான். இப்படி சுத்தி மூக்கை பிடித்தாலும் ஒன்று தான். என்று கையால் செய்கையின் மூலம் விளக்கினார்.

    சென்னை

    சென்னை

    தமிழக பாஜக மேலிட பெறுப்பாளர் சி‌.டி.ரவி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் கூட்டணி என்று தெரிவித்து விட்டார். அமிஷ்தா சென்னை வருகை தந்தபோது கூட அதிமுக உடன் தான் கூட்டணி என்று தெளிவுபடுத்தி உள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி. பழனிச்சாமியை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டோம். பாஜக கட்சியினுடைய மரபு அடிப்படையில் எப்போது அறிவிக்க வேண்டுமோ அப்போது அறிவிப்போம். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜகவில் யாரும் சொல்ல வில்லை.

    4 அல்லது 5 நாட்களில் முடிவு

    4 அல்லது 5 நாட்களில் முடிவு

    முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் 4, 5 நாட்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை அறிவிக்கும் என்றார். திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கும் தேசிய கட்சிகள் கருங்காளிகள் என்று
    கே.பி.முனுசாமி பேசியுள்ளார் என்ற கேள்விக்கு, அதனை கே.பி.முனுசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    கே.பி.முனுசாமிக்கு யார் என்று தெரிந்தால் தைரியமாக வெளியே செல்லட்டும். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிகாந்திற்கு பாஜக தேவையா என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். பாஜகவிற்கு
    ஆதரவு கொடுக்கலாமா அல்லது ஓட்டுப் போடலாமா என்பதை ரஜினிகாந்த் முடிவு செய்வார். பாஜக தலைமை
    எந்த இடத்தில் போட்டியிட சொன்னாலும்
    நான் போட்டியிட தயார்.

    வரவேற்பு

    வரவேற்பு

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து நீங்கள் போட்டியிட தயாரா என்ற கேள்விக்கு, உதயநிக்கு எதிராக போட்டியிட நான் தயார். எனக்கு எதிராக உதயநிதி போட்டியிட தயாரா என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, குஷ்பு சுந்தருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    குஷ்புக்கு சிறப்பான வரவேற்பு

    குஷ்புக்கு சிறப்பான வரவேற்பு

    இதனையடுத்து, புதுப்பேட்டை கொய்யா தொப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குஷ்பு சுந்தர் பாஜக கொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.
    இந்நிகழ்ச்சிக்கு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் கோழிகடை கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
    இதில், தொகுதி பொருளாளர் பத்மநாபன், இளைஞரணி தலைவர் ரஷ்யா மகேஷ், மீனவரணி செயலாளர் சதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    English summary
    Kushboo says that BJP will announce ADMK alliance CM candidate within 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X