• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

யார் அந்த நடிகை.. கடைசிவரை நிறைவேறாமல் போன "எய்ட்ஸ்" முருகனின் ஆசை.. சபலத்தால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியம்

|

சென்னை: முருகன் என்று அம்சமான ஒரு பெயரை வைத்து கொண்டு, உலகத்தில் இல்லாத அநியாயங்களை அசால்ட்டாக செய்து முடித்துவிட்டார்.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதே திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனின் மரணம் நமக்கு மறுபடியும் உணர்த்தும் செய்தி!

ஒடிசலான தேகம் - எடுப்பான பல் - ஒட்டிப்போன கன்னம் - படிப்பறிவு குறைவு - பின்தங்கிய பொருளாதார சூழல்.. இதுதான் முருகனின் மொத்த அடையாளம்!

வாழ்க்கையில் நிறைய அடிபட்டதாலோ என்னவோ, புத்தி தடுமாறியது.. இந்த உலகில் இப்படி இருந்தால்தான் வாழ முடியும் என்ற ஒரு போலியான மனக்கணக்குதான் முருகனின் முதல் பிள்ளையார் சுழி.

சென்னை அருகே பாஜக நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்ட சொகுசு விடுதி முற்றுகை- விசிகவினர் மீது தடியடி சென்னை அருகே பாஜக நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்ட சொகுசு விடுதி முற்றுகை- விசிகவினர் மீது தடியடி

 ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

கொஞ்சம் கொஞ்சமான திருட்டு சம்பவங்கள், நாளடைவில் நாடு தேடும் கொள்ளையனாக மாற்றிவிட்டது.. மணி ஹீஸ்ட் என்ற ஹாலிவுட் சீரியல் என்றால் கொள்ளைக்கார முருகனுக்கு கொள்ளை பிரியமாம். இந்த சீரியலை பார்த்துதான், தன்னுடைய வங்கி கொள்ளையை நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ளார்.. நிறைய ஹாலிவுட் படங்களை பார்ப்பது, அதில் உள்ள டெக்னிக்குகளை தெரிந்து கொள்வது, பிறகு அதை செயல்படுத்துவதற்காக சோதனை முயற்சியில் ஈடுபடுவது, சக கொள்ளையர்களுடன் இதை பற்றி விவாதிப்பது, ஒரு திருட்டு கச்சிதமாக நடந்து முடியும்வரை அதிலேயே முழு கவனத்தை செலுத்துவது போன்ற நாசூக்கான அதே சமயம், பொறுமையான நுட்பங்களை கற்று தேர்ந்துள்ளார் முருகன்.

 கார் டிரைவிங்

கார் டிரைவிங்

அதனால்தான், கர்நாடகா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு மாநில போலீசாருக்கே தண்ணி காட்ட முடிந்திருக்கிறது.. ரொம்ப சூப்பராக கார் ஓட்டுவாராம்.. போலீசாரே இவரை சேஸிங்கில் பிடிக்க முடியாமல் பல முறை திணறி இருக்கிறார்கள். .. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் ஆசை யாரை விட்டது.. கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்களை எடுக்க தெலுங்கு பக்கம் போனார்.

நஷ்டம்

நஷ்டம்

அக்கா பையன் சுரேஷை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினார்.. தெலுங்கு மொழியில் 2 படங்களும் தயாரித்தார்... படம் எதுவும் வெளியாகவில்லை.. நஷ்டம் ஏற்பட்டுவிடவும் திரும்பவும் கொள்ளையடிக்க மச்சான் சுரேஷூடன் பிளான்களை போட்டார். சினிமாவில் கவனம் செலுத்தும்போதுதான் நடிகைகளுடன் எல்லைமீறி பழகி உள்ளார்.. திருடிய நகைகளை அந்த துணை நடிகைகளுக்கும், அழகிகளுக்கும் அள்ளி அள்ளி தந்து, நோயை வாங்கி கொண்டார்.

 துணை நடிகைகள்

துணை நடிகைகள்

யாரோ ஒரு நடிகைக்கு காஸ்ட்லி நகையை தந்ததாக போலீசில் சொன்னார், ஆனால் அந்த நடிகை யார் என்று கடைசி வரை தெரியவே இல்லை. அதேபோல, போலீசார் முருகனை 2 மாநிலங்களிலும் வலைவீசி தேடி வரும்போது, சொகுசு ஆம்னி வேனில், ஒரு துணை நடிகையை வைத்து கொண்டு ரவுண்டு அடித்து வருகிறார் என்று செய்திகள் கசிந்தன... அந்த நடிகையும் யார் என்று இறுதிவரை தெரியவே இல்லை.

 எய்ட்ஸ்

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோய் இந்தியாவில் குறைந்துவருவதாக ஒரு புள்ளி விவரம் சொன்னாலும், முருகன் ஆட்டம் போட்ட காலம் 10 வருடங்களுக்கு முன்பு என்கிறார்கள்.. நோய் தாக்கியபோதே ஆள் மெலிந்து விட்டார்.. முடியும் கொட்டி விட்டது.. அரசு ஆஸ்பத்திரிகளில் வேறு வேறு பெயர்களில் அட்மிஷன் போட்டு இதற்காக சிகிச்சையும் எடுத்து கொண்டு வந்திருக்கிறார். இந்த சிகிச்சை சுத்தமாக பலன் தராமல் இன்று போயுள்ளது.

பாசம்

பாசம்

முருகனிடம் சில நல்ல குணாதிசயங்களும் இருந்திருக்கின்றன.. குடும்பத்தார் மீது நிறைய பாசத்தை முருகன் பொழிந்து வந்துள்ளார்.. குறிப்பாக மனைவி மஞ்சுளா என்றாலோ, மச்சான் சுரேஷ் என்றாலோ, மனுஷன் திணறி போய்விடுவார்.. மஞ்சுளாவுக்கு கடவுள் பக்தி அதிகம்.. முருகனுக்கு பக்தி சுத்தமாக கிடையாது என்றாலும், மனைவியின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர் கூப்பிடும்போதெல்லாம் கோயிலுக்கு சென்று வந்துள்ளார்.. முருகனுக்காக அந்த பெண் வேண்டிக் கொண்டதெல்லாம் இன்று உடைந்துவிட்டது. கடவுள் மீது இவ்வளவு பக்தி உள்ள பெண், தன் கணவனை, கனிந்த அன்பாலும், சமயோஜித பேச்சாலும் திருத்த தவறிவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது.

சுரேஷ்

சுரேஷ்

அதுபோலவேதான் சுரேஷூம்.. மச்சானின் அழகை முதலில் ரசித்தது அனேகமாக தாய்மாமன் முருகனாகத்தான் இருக்க முடியும்.. எத்தனை முறை அடிபட்டாலும், எத்தனை முறை ஜெயிலுக்கு போனாலும், சுரேஷை ஹீரோவாக்குவது என்ற பிடிவாதம் கடைசிவரை முருகனுக்கு போகவே இல்லை.. அந்த ஆசை முருகனுக்கு இறுதிவரை நிறைவேறவும் இல்லை.

 திறமை இருக்கு

திறமை இருக்கு

அதேபோல, தன்னம்பிக்கையும் அதிகமாக இருந்திருக்கிறது.. திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும்போது கூட, முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எனக்கு நிறைய திறமை இருக்கு.. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்பேன்.. நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்துடுவேன்.. நான் ஒரு நல்ல சினிமா புரொடியூசர்.. என் வாழ்க்கையில் ஜெயில் அனுபவம் எனக்கு நிறைய இருக்கு" என்று தத்துவமாக உதிர்த்ததும்கூட தன் திறமை மீதான நம்பிக்கையால்தான்!

 வளர்ப்பு நாய்

வளர்ப்பு நாய்

ஒரு ஊரில் திருட போனால், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டு 6 மாசம் தங்குவது முருகனின் பழக்கம்.. 6 மாசத்துக்குள் கொள்ளைக்கான ஸ்கெட்சை கச்சிதமாக போட்டு, கொள்ளையும் அடித்துவிட்டு, ஊரை காலி செய்துவிடுவார்.. ஆனால் அப்படி செல்லும் வீடுகளில் எல்லாம் தன்னுடைய வளர்ப்பு நாயை கொண்டு சென்று பராமரித்துள்ளார்.

 உதவிகள்

உதவிகள்

ஒருவேளை தான் குடியிருக்கும் தெரு மோசமான நிலையில் இருந்தால்கூட, "ஏன் இந்த தெருவுல இப்படி குண்டும் குழியுமாக ரோடு இருக்கு.. அதை சரி செய்யணுமே.. முடிந்த அளவிற்கு நீங்க பணத்தை திரட்டுங்க, மீதி எவ்ளோ தேவைப்படுதோ நான் தர்றேன்" என்று அந்த பகுதிவாசிகளிடம் முருகன் சொன்னதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

 அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆயிரம் திறமை இருந்தாலும், ஆயிரம் குணநலன்கள் இருந்தாலும் முருகன் ஒரு மன்னிக்க முடியாத குற்றவாளி.. பின்லேடன் முதல் பிந்தரன்வாலே வரை எல்லா தீவிரவாதிகளையும் எல்லா பயங்கரவாதிகளையும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே உருவாக்குகிறார்கள் என்றால், இதுபோன்ற கொள்ளையர்களின் தவறுகளையும் சில அதிகாரிகள் பொத்தி பாதுகாத்து விடுவது தொடர் சம்பவமாகிவிடுகிறது.. நல்லவேளை, கடைசி நேரத்தில் முருகனை கைது செய்து போலீசார் தங்கள் கடமையை செவ்வனே செய்துவிட்டனர்.. எனினும், முருகனை போன்ற கொள்ளையர்கள் என்றோ கைதாகி இருந்தால், இந்நேரம் அந்த சிறைவாசம் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி இருந்திருக்கும்.

பாடம்

பாடம்

அதற்காக முருகன் ஒன்றும் தியாகி இல்லை... மனசாட்சியே இல்லாமல் நடத்திய பல கொள்ளைகளுக்கும், ஒழுக்கம் தவறி ஆடிய ஆட்டத்துக்கும் காலம் வழங்கிய தண்டனை இது என்றே கொள்ளலாம்.. மூட்டை மூட்டையாக மண்ணுக்கடியில் நகைகளையும், கோடி கோடி ரூபாயையும் புதைத்து வைத்தாலும், மனைவி மக்களோடு கொஞ்சநேரம்கூட நிம்மதியாய் சேர்ந்து வாழ முடியாமல் போனதும், யாருக்கும் சிறிதும் வருத்தமில்லாத முறையில் இன்று மரணத்தை தழுவ நேர்ந்ததும், தவறான பாதையில் பயணிக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பாடத்தைதான் கற்பித்துவிட்டு போயிருக்கிறது!

English summary
Lalitha Jewellery Thief Murugan's life is a lesson to misguided youth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X