கார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா?.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்!.. திக் திக்!
சென்னை: காரை ஓட்டிய போது ஸ்டியரிங்கை விட்டு விட்டு கைகளை தட்டி என்ஜாய் செய்தாரா யாஷிகா என்ற சந்தேகம் இறந்த அவரது தோழி விபத்துக்கு முன்னர் பதிவு செய்த வீடியோவை பார்க்கும் போது எழுகிறது.
Recommended Video
கடந்த 25 ஆம் தேதி யாஷிகா ஆனந்த் தனது 3 நண்பர்களுடன் கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே ஒரு ரிசார்ட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தார்.
அந்த காரை யாஷிகாவே ஓட்டினார். அவரது பக்கத்து சீட்டில் தோழி வள்ளிச் செட்டி பவானி இருந்தார். பின்பக்கத்தில் இரு ஆண் நண்பர்கள் உட்கார்ந்திருந்தனர்.

மருத்துவமனை
அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது சூலேரிக்காடு என்ற இடத்தில் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் இடித்தார். அப்போது இந்த விபத்தில் வள்ளி செட்டி பவானி உயிரிழந்துவிட்டார். மற்ற மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கூரை
இந்த நிலையில் யாஷிகாவின் காரின் மேற்கூரையை திறக்க முடியும். இதனால் யாஷிகாவின் நண்பர்கள் எழுந்து நின்று கொண்டு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இறந்து போன வள்ளிச் செட்டி பவானி ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

அமெரிக்கா
இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்து வந்தார். யாஷிகாவை பார்ப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்திருந்தார். விபத்து ஏற்படுவதற்கு முன்னர் யாஷிகாவின் தோழி வள்ளிச் செட்டி பவானி எடுத்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கார் ஓட்டுதல்
அதில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டுகிறார் யாஷிகா ஆனந்த். பயங்கர சப்தத்தில் பாட்டு ஒலிக்கிறது. இதில் அவ்வப்போது ஸ்டியரிங்கில் இருந்து யாஷிகா கைகளை எடுத்துவிட்டு கிளாப் செய்வது போன்று இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது விபத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோதானா என தெரியவில்லை.

போலீஸிடம் வாக்குமூலம்
மேலும் யாஷிகா போலீஸிடம் கூறிய வாக்குமூலத்தில் தனது தோழி சீட் பெல்ட் அணியவில்லை என தெரிவித்திருந்தார். எனவே இதை வைத்து பார்க்கும் போது விபத்து நடப்பதற்கு முன்னர் யாஷிகாவின் தோழி மட்டும் மேல் டாப்பில் எழுந்து நின்று ஆரவாரம் செய்திருக்கக் கூடும்.

யாஷிகா அதிவேகம்
யாஷிகா அதிவேகமாக சென்றதாலும் கைகளை தட்டியதாலும் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதியது. சீட் பெல்ட் போட்டிருந்த யாஷிகா தனது காரில் இருந்த ஏர் பலூன் திறந்ததால் உயிர் தப்பினார். ஆனால் சீட் பெல்ட் அணியாத அவரது தோழி காரின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரிகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications