துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து, சட்டம் ஒழுங்கு சரியில்லை - எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
Recommended Video

தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கஞ்சா,குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டப்பஞ்சாயத்து கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் உள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையால் அதிமுக நிர்வாகிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிமுக அரசால் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது.

நிவாரணம் வழங்கவில்லை
வடகிழக்கு பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு கிடைக்காமல் மக்களும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை திமுக அரசு செய்யவில்லை. 2015 இல் பெரிதல்ல பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. வெள்ள நீரால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

காழ்ப்புணர்ச்சி
தமிழக மக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ..2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அது அம்மா பெயரில் செயல்படுவதால் காழ் புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது.

அரசின் கைப்பாவை
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றனர். ஆனால் தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு. தமிழக காவல்துறை தமிழக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கண்டித்து தான் இன்றைய தினம் திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications