சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்ச் 8 முதல் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்... வழக்கறிஞர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மார்ச் 8 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Lawyers on behalf of the Chennai H C Bar Association are set to engage in a court boycott protest from March 8

இந்தியா முழுவதும் கொரோனா ஆட்டம் காட்டியது. இந்த கொரோனா நீதிமன்ற பணிகளையும் விட்டு வைக்கவில்லை. தொற்று காரணமாக பெரும்பாலான வழக்குகள் ஆன்லைன் மூலமாகவே நடந்தன. அதன்பின்னர் ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகள் மீண்டும் சுறுசுறு ப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் அறை மீண்டும் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மார்ச் 8 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்படுவதால் நீதிமன்ற பணிகள் பாதிப்படையும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்த்தனர்.

English summary
Lawyers on behalf of the Chennai High Court Bar Association are set to engage in a court boycott protest from March 8
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X