தீரன் சின்னமலையின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்.. முதல்வர் விஜய்
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில், தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று, தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
