சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்

கொரோனா பாதிப்பினால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் மக்கள், லிங்க முத்திரை செய்து உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்ள முடியும் என மதுரை பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கண்டறிந்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பினால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் மக்கள், லிங்க முத்திரை செய்து உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்ள முடியும் என மதுரை பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கண்டறிந்துள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் இந்த கண்டுபிடிப்புக்கு சென்னை ஐ.ஐ.டி அங்கீகாரம் அளித்துள்ளது.

மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு இந்தியாவே அல்லல் படும் நிலையில், லிங்க முத்திரை எனும் யோக பயிற்சியின் மூலம் உடல் வெப்பத்தை அதிகரித்து ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசுகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

கொரோனா நோய் தடுப்பு

கொரோனா நோய் தடுப்பு

மதுரை 'சித்தர் வனம்' சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனையின் தலைமை மருத்துவரான இவர், கொரோனா நோய்த் தடுப்பு முறைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இதனைக் கண்டறிந்துள்ளார். இதனை, ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐ.ஐ.டியின் ஆய்வகத்துறை இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

லிங்க முத்திரை ஐஐடி

சென்னை ஐ.ஐ.டி-யின் பயோ மெடிக்கல் பொறியியல் துறை லிங்க முத்திரை எனப்படும் யோக முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம் என கண்டறிந்துள்ளது. இந்த முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டியம் அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எளிதாக செய்யலாம்

எளிதாக செய்யலாம்

லிங்க முத்திரை மூலம் மனித உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வகையில், உடல் வெப்ப நிலை அதிகரித்து, இதயத் துடிப்பு மற்றும் நாடித்துடிப்புகள் சீராக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் கல்பனா, "மக்கள் எளிதாக தாங்களே 'லிங்க முத்திரையை' செய்யலாம். இந்த முத்திரையைச் செய்வதன் முலம், உடலின் வெப்பம் அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பாற்றல் தூண்டப்பெற்று (activation of anti-viral innate immune response) கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வருகிறது.

ஆக்ஸிஜன் அளவு உயரும்

ஆக்ஸிஜன் அளவு உயரும்

ஆக்ஸிஜன் அளவு கணிசமாக உயர்ந்து, சுவாசம் சீராகிறது. பெருந்தொற்று காலத்தில், நோயாளிகளுக்கு, இந்த முத்திரை பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார். சிறுவர்கள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த லிங்க முத்திரையைச் செய்யலாம். கர்ப்பிணிகள் மட்டும் செய்யக்கூடாது. கொரோனாவிற்காக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், செயற்கை ஆக்ஸிஜன் துணையுடன் இருந்தாலும்கூட இந்த முத்திரையைச் (Oxygen support) செய்யலாம்.

எப்படி செய்வது

எப்படி செய்வது

உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். முதலில் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்க வேண்டும். எந்த நாசி துவாரத்தில் குறைவான அளவு மூச்சு வருகிறது அல்லது அடைத்திருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள கையின் கட்டை விரலை செங்குத்தாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். மற்றொரு கையின் ஆள்காட்டி மற்றும் கட்டை விரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலின் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற அனைத்து விரல்களையும் கோர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் வெப்பம் அதிகரிக்கும்

உடல் வெப்பம் அதிகரிக்கும்

இரு கைகளுக்கும் இடையே காற்று புகாதவாறு இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். இதை செய்யத் தொடங்கி, ஐந்தில் இருந்து நாற்பது நிமிடத்திற்குள் உடல் வெப்பம் அதிகரிக்கும். நெற்றி, மூக்கு, தொண்டை, நெஞ்சுப் பகுதி முழுதும் வெப்பம் அதிகரித்து வியர்க்கும்போது, முத்திரை செய்வதை நிறுத்திக் கொள்ளலாம். மருத்துவர் கல்பனா தொடர்புக்கு : 9585337331

English summary
inga Mudra Yoga Practice is will increase the oxygen level IIT Chennai. Jaya Kalpana, a Siddha doctor from Madurai, has found that people suffering from coronary heart disease and oxygen deficiency can increase the amount of oxygen in the body. IIT Chennai research proved traditional Yoga Linga Mudra to increase oxygen level and cure Corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X