சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

IPL2020: லாக்டவுன் 4.0ல் வந்த முக்கிய தளர்வு.. ரசிகர்கள் இன்றி ஐபிஎல் 2020 நடக்குமா? பின்னணி என்ன?

லாக்டவுன் 4.0ல் கொண்டு வரப்பட்டு இருக்கும் தளர்வு காரணமாக நாடு முழுக்க ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுன் 4.0ல் கொண்டு வரப்பட்டு இருக்கும் தளர்வு காரணமாக நாடு முழுக்க ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது .

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. மூன்று முறை லாக்டவுன் போடப்பட்டும் கூட தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்.. மத்திய அரசு அளித்த அதிகாரம்மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்.. மத்திய அரசு அளித்த அதிகாரம்

விளையாட்டு தளர்வு

விளையாட்டு தளர்வு

இந்த லாக்டவுன் 4.0ல் கொண்டு வரப்பட்டு இருக்கும் முக்கியமான தளர்வு என்றால் அது விளையாட்டு தொடர்பானதுதான். அதன்படி விளையாட்டு செயல்பாடுகள் ரசிகர்கள் இன்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது விளையாட்டு பயிற்சிகள், சில போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடக்கலாம். உள்விளையாட்டு அரங்குகள் ரசிகர்கள் இன்றி செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

லாக்டவுன் 4.0ல் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த தளர்வு காரணமாக நாடு முழுக்க ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.இதற்கு முன்பே ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாமா என்று கேள்வி எழுந்தது. ரசிகர்கள் டிக்கெட் மூலம் வரும் வருவாய் ஐபிஎல்லில் மிகவும் குறைவே. தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்கள் மூலம்தான் ஐபிஎல் போட்டியில் அதிக வருமானம் வருகிறது.

குறைவான வருமானம்

குறைவான வருமானம்

டிக்கெட் மூலம் 4%க்கும் குறைவாகவே வருமான வருகிறது என்கிறார்கள்.அதனால் ரசிகர்கள் இல்லாமலே போட்டியை நடத்தலாம் என்று விவாதங்கள் எழுந்தது. ஆனால் இதற்கு முன்பு இருந்த லாக்டவுனில் அப்படி போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஐபிஎல் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போது வரை ஐபிஎல் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

ஐபிஎல் எப்படி

ஐபிஎல் எப்படி

இந்த நிலையில் தற்போது இந்த லாக்டவுன் 4.0 தளர்வு காரணமாக ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ இந்த முடிவை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.அதே சமயம் வெளிநாட்டு வீரர்கள் யாரும் விமான போக்குவரத்து தடையால் இந்தியா வர முடியாது. அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே முழுமையாக போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை.

சந்தேகம்தான்

சந்தேகம்தான்

இதனால் ஐபிஎல் தொடங்குவது சந்தேகம்தான் என்கிறார்கள். இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடக்க வாய்ப்பு குறைவுதான். உலகக் கோப்பை 2020 போட்டி இருப்பதால் ஐபிஎல் நடக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஐபிஎல் தவிர மற்ற விளையாட்டு போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. வீரர்கள் தங்கள் பார்மை தக்க வைக்கும் வகையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Lockdown 4.0: Will IPL 2020 start without audiences due to new regulations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X