லோக்சபா தேர்தல்:தமிழ்நாட்டில் திமுக அணி 28; அதிமுக 6 இடங்கள் - பாஜகவுக்கு 'முட்டை'- India TV survey

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களைக் கைப்பற்றும்; அதிமுக 6 இடங்களில் வெல்லும் என India TV survey கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்த கட்சிகள் இரு அணிகளும் மாறி மாறி இடம் பிடிக்கும். திமுக கூட்டணியில் எந்த ஒரு பிளவுக்கும் சாத்தியமில்லாத நிலைமைதான் உள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியை முறித்ததால் அதிமுக, முஸ்லிம்கள் வாக்குகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.

Lok Sabha Poll: DMK Alliance to get 28 seats in TN- India TV Survey

இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India TV-CNX கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டு நிலவரம் தொடர்பான India TV-CNX கருத்து கணிப்பு முடிவுகள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள்

திமுக கூட்டணி 28 இடங்கள்

திமுக 21 இடங்கள்

காங்கிரஸ் 7 இடங்கள்

அதிமுக 6 இடங்கள்

பாமக -1

இதர கட்சிகள் 4

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பு.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்:

திமுக 31%

அதிமுக 25%

காங்கிரஸ்- 11 %

பாஜக- 7%

பாமக -6%

இதர கட்சிகள்- 20%

Lok Sabha Poll: DMK Alliance to get 28 seats in TN- India TV Survey

சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பில், திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கு 0 முதல் 1 எனவும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவித்திருந்தன. அதாவது திமுக தலைமையிலான "இந்தியா" கூட்டணிக்கு மொத்தம் 30 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என்பது டைம்ஸ் நவ் கருத்து கணிப்பாக இருந்தது.

அத்துடன் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி - 57.20%; (அதிமுக பிளஸ்) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 27.80% இதர கட்சிகள் 15.00%. வாக்குகளைப் பெறும் என்று Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+