Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுகுக்கு பின் “கத்தி”.. எல்லோரையும் நம்பாதீங்க! அண்ணாமலையை விமர்சித்த மறுநாள் காயத்ரி “வார்னிங்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் 6 மாதங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், "அனைவரையும் நேசிக்கலாம் என்றும், ஆனால், குறைவான நபர்களையே நம்ப வேண்டும்" என்றும், அண்ணாமலையை விமர்சித்த மறுநாளே ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்சி இடையிலான ஆடியோ உரையாடல் சர்ச்சையை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நடவடிக்கைக்கு உள்ளானவர் காயத்ரி ரகுராம்.

கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட நிலையில், அவர் வகித்த பதவியும் பறிக்கப்பட்டு இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாமலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

 சூர்யா சிவாவுக்கு கண்டனம்

சூர்யா சிவாவுக்கு கண்டனம்

சூர்யா சிவா ஆடியோ குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும்.

 போலீஸ் கைது செய்ய வேண்டும்

போலீஸ் கைது செய்ய வேண்டும்

திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று பதிவிட்டு இருந்தார்.

 100 பொய்கள்

100 பொய்கள்

இது தொடர்பாக அவர் தனது மற்றொரு பதிவில், "உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்." என்றார்.

 துபாய் ஹோட்டல்

துபாய் ஹோட்டல்

சமீபத்தில் அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், "நான் முதலில் சென்னை சோமர்செட் ஓட்டலில் சந்தித்ததாக தவறான முறையில் சொல்லி எண்ணை குறிவைத்து விமர்சித்தார்கள். தற்போது நான் துபாய் ஓட்டலில் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். நான் அமைதியாக இருக்கப்போகிறேன். இதற்கு அண்ணாமலையே பதிலளிப்பார்.

 தொடர் அழைப்புகள்

தொடர் அழைப்புகள்

தற்போது எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்து வகையில் இருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். அதற்கு காரணம், அவர்களின் குடும்ப பெண்களை பற்றி அண்ணாமலை அவர்கள் எதுவும் பேசவில்லை. அண்ணாமலை எனது பெயரை எங்கும் பயன்படுத்தவில்லை என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 கூட்டத்தில் பேசிய அண்ணாமலை

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை

ஆனால், அவர் 150 பேர் இருந்த கூட்டத்தில் என் பெயரை பயன்படுத்தினார். அண்ணாமலை அவ்வாறு ஏன் பேசினார்? எதன் அடிப்படையில் அவர் அப்படி பேசினார்? என்று அவரிடம் நான் கேட்கபோவது இல்லை. நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எனது மாநில தலைவர் அண்ணாமலை என் சார்பாக மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்." என பதிவிட்டு இருந்தார்.

 மீண்டும் விமர்சனம்

மீண்டும் விமர்சனம்

இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி, "அண்ணாமலை எந்த விசாரணையும் செய்யாமல் என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டார். எனது குணத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். என்னை திமுகவின் ஐடி விங் என்று கூறிவிட்டார். நான் தவறுக்கு எதிராக நிற்கிறேன். மோடிக்காகவும், நாட்டுக்காகவும் பாஜகவில் வேலை செய்கிறேன்.

 பெண்களை அவமதிப்பவர்கள்

பெண்களை அவமதிப்பவர்கள்

கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் நான் பெண்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக நிற்கிறேன். அது பெரிய தலைவராக இருந்தாலும், சிறிய தலைவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே விதிதான். பாஜகவின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிவேன். நாட்டுக்கு சேவை செய்வது எனக்கு மன அமைதி தருகிறது." என்று பதிவிட்டு இருந்தார்.

 எல்லோரையும் நம்பக்கூடாது

எல்லோரையும் நம்பக்கூடாது

இந்த நிலையில் இன்று 2 பேர் கை குழுக்கொண்டு மற்றொரு கையில் கத்தி மறைத்துக்கொண்டு நிற்பதை போன்ற கார்ட்டுன் படத்தை பதிவிட்டு உள்ள அவர், அனைவரையும் நேசிக்கலாம் என்றும், ஆனால், குறைவான நபர்களையே நம்ப வேண்டும் என பதிவிட்டு உள்ளார். இதுவும் அண்ணாமலை மற்றும் பாஜகவினரை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கருத்திட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+