உஜ்வாலா எல்பிஜி கேஸ் மானியம் 300 ரூபாய் யாருக்கு கிடைக்கும்.. அக்கவுண்ட்டில் தொகையை பார்ப்பது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் சிலிண்டர் விலை மற்றும் மானியத் தொகை குறித்த சமீபத்திய மாற்றங்கள் சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.. குறிப்பாக உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதிகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது.. சிலிண்டர் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் டெலிவரி புகார்கள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

மத்திய அரசு வழங்கி வரும் மானிய முறையிலும் சிலிண்டர் விலையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. குறிப்பாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது..

LPG Subsidy Gas Price Update Cylinder Booking Ujjwala Yojana Consumer Awareness Gas Safety Tips Digital Payment Offers LPG Cylinder Price Tamil Nadu Gas Booking Cashback Online LPG Refill

மற்ற பொதுவான நுகர்வோர்களுக்கு சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப சிலிண்டர் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு மாதமும் 1 தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பதால் அதன் தாக்கம் நேரடியாக குடும்பச் செலவில் எதிரொலிக்கிறது..

எல்பிஜி சிலிண்டர் - 300 ரூபாய் மானியம்

இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்வது மிகவும் எளிதாகியுள்ளது.. பாரத் கேஸ், இண்டேன் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக வாட்ஸ்அப் நம்பர்கள் வழங்கியுள்ளன.

இந்த எண்களுக்கு REFILL என மெசேஜ் அனுப்புவதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சிலிண்டர் புக் செய்யலாம்.. மேலும் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகள் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் சலுகையாகவும் கிடைக்கிறது.. இது தவிர ஏஜென்சிகளுக்கு நேரில் செல்லாமல் மொபைல் ஆப் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது..

இரும்பு வளையத்தில் குறியீடு

சிலிண்டர் விநியோகத்தின் போது டெலிவரி மேன்கள் கூடுதல் கட்டணம் கேட்பதாக பல புகார்கள் எழுந்து வருகின்றன.. அரசு நிர்ணயித்த விலையைத் தவிர ஒரு ரூபாய் கூட கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை.. விநியோகஸ்தர்கள் கூடுதல் பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியின் மேலாளரிடமோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கலாம்.

ஒவ்வொரு கஸ்டமரும் தங்களது உரிமையை அறிந்து கொள்வது அவசியம்.. அதேபோல் சிலிண்டர் பாதுகாப்பிலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.. சிலிண்டரின் மேற்புறத்தில் உள்ள இரும்பு வளையத்தில் A-26' அல்லது 'B-27' என ஒரு குறியீடு இருக்கும்.. இது சிலிண்டரின் காலாவதி தேதியை குறிக்கிறது.. காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்பதால் டெலிவரி எடுக்கும்போதே இதை சரிபார்க்க வேண்டும்..

மின்சார ஸ்விட்சுகள் - அலர்ட்

ஒருவேளை வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டால் உடனடியாக ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

மின்சார ஸ்விட்சுகளை பயன்படுத்தவோ தீக்குச்சிகளை கொளுத்தவோ கூடாது.. சிலிண்டர் இணைப்பை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.. இதற்காக கேஸ் ஏஜென்சிக்கு அலைய வேண்டிய தேவையில்லை.. இத்தகைய நடைமுறை தகவல்களை மக்கள் சரியாக தெரிந்து வைத்திருப்பது பண விரயத்தை தடுப்பதோடு பாதுகாப்பையும் உறுதி செய்யும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+