Gold Price: அட்சய திருதியை அதுவுமா ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் உயர்ந்தது.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் சட்டென விலை குறைந்தது. அதுவும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. நாளை அட்சய திருதியை என்பதால் தங்கம் வாங்க பிளான் போட்டவர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையை பொறுத்தவரை கணிக்க முடியாத அளவு உயர்ந்து வருகிறது. திடீரென ஏறுவது பின்னர் சரிவதுமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

தங்கம் விலை
அதற்கு பிறகு கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. சொல்லப்போனால் பிப்ரவரி தொடக்கத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வாக ஒரு சவரன் ரூ.1.30 லட்சத்தை தொட்டது. இதனால் நகை பிரியர்கள் பெரும் கலக்கமடைந்தனர். சாமானிய மக்களும் இனி எப்படி தங்கம் வாங்க முடியும் என கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் அதன்பிறகு சற்று குறைய ஆரம்பித்தது.
குறிப்பாக ஈரான் அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது. முதலீட்டாளர்கள் பலரும் கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியது இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று தாறுமாறாக குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இன்றும் விலை உயர்வு
நேற்று முன் தினம் ஆபரணத் தங்கம் சென்னையில் ரூ. 14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று திடீரென தங்கம் விலை சரிந்தது. நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை குறையுமா என நகைபிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாளை அட்சய திருதியை என்பதால் பலரும் கொஞ்சமாவது தங்கம் வாங்கி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய தங்கம் விலை எப்படி இருக்கும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். விலை இன்று உயர்ந்துள்ளதால் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880 (இன்று)
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680 (நேற்று)
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400














Click it and Unblock the Notifications