Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே உஷார்.. சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் "மெட்ராஸ் ஐ".. மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த நவம்பர் மாதத்தில் வேகமாக பரவிய மெட்ராஸ் ஐ பாதிப்பு அதன் பிறகு குறையத்தொடங்கியது. தற்போது சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகம் எடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் மெட்ராஸ் ஐ பாதிப்புடன் மருத்துவமனை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

பருவ மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று மெட்ராஸ் ஐ. கண்ணின் கன்சங்டிவா என்ற விழி வெண்படலத்தால் ஏற்படும் நோயான இது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் பரவும்.

குறிப்பாக அடினோ வைரஸ் என்ற கிருமியினால் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் இந்த கண் நோய் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது.

மெட்ராஸ் -ஐ

மெட்ராஸ் -ஐ

ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்ட மெட்ராஸ் ஐ பாதித்தால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவப்பாக இருப்பது, நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் ஆகியவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆக உள்ளது. மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும் நபர்களுக்கும் இந்த நோய் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

தானாக சரியாகிவிடும்?

தானாக சரியாகிவிடும்?

கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் வேகமாக பரவியது. அதன்பிறகு நோயின் பரவல் குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத்தொடங்கியுள்ளது. தினமும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கின்றனர். மெட்ராஸ் ஐ வந்த பலரும் தானாக சரியாகிவிடும் என்று சுயமாக மெடிக்கல்களில் கண் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்வதாலும் நோயின் பரவல் வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தி கொள்ளவும்

தனிமைப்படுத்தி கொள்ளவும்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு மட்டும் தினமும் 25-க்கும் மேற்பட்டவர்கள் கண் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில், "மெட்ராஸ் ஐ பாதிப்பு வந்தால் 5 நாட்களில் குணம் ஆகி விடும். இதற்கு தேவையான மருந்துகளும் அரசு மருத்துவமனையில் கையிருப்பில் உள்ளன. எளிதில் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்பதால் கண்நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது.

பார்வையிழப்பு ஏற்படும்?

பார்வையிழப்பு ஏற்படும்?


எளிதில் குணம் ஆகக் கூடியது என்றாலும் அலட்சியப்படுத்தினால் பார்வையிழப்பை சந்திக்க நேரிடும். எனவே பாதிப்பு தென்பட்டால் மருத்துவமனையை அணுகுவது நல்லது. மெட்ராஸ் ஐ ஒரு கண்ணில் பாதித்தால் மற்றொரு கண்ணிலும் பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். நோய் பாதிப்பு சரியாகும் வரை பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் விலகி தனியாக இருக்க வேண்டும். அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுயமாக மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கண்ணுக்கு மருந்து போட்டு விடுபவர்கள் மருந்து போடுவதற்கு முன்பாகவும் மருந்து போட்ட பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+