மெட்ராஸ் ஐ தீவிர பரவல்..உஷார்..எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்..மாணவர்களுக்கு கட்டாய லீவு தர உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்கள் பலரும் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். தினசரியும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சென்னையில் தொடங்கி நெல்லை வரை மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பல மருத்துவமனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கொசு தொல்லை காரணமாக பல்வேறு காய்ச்சல்களும் பரவுகின்றது.

இந்நிலையில், கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஸ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கண்கள் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும். கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் ஆகும்.

 மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு காரணம்

மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு காரணம்

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும். சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர்.

கட்டாய விடுப்பு

கட்டாய விடுப்பு

நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களே அதிகம் இதையடுத்து, மெட்ராஸ் ஐ பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மெட்ராஸ் ஐ அறிகுறி தென்பட்டால் கட்டாய விடுப்பெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

மருந்து தட்டுப்பாடு

மருந்து தட்டுப்பாடு

சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எழும்பூர் கண் மருத்துவமனையில் "மெட்ராஸ் ஐ" நோய்க்கான மருந்து தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினசரி 100க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு சிகிச்சை அளிக்க புறநோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நீண்ட நேரம் நின்று சிகிச்சை பெற வேண்டி உள்ளது. ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால் அவர், ஒருவருக்கு சோதனை செய்து முடிக்கும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டிய உள்ளது என்பது நோயாளிகளின் புகாராகும்.

நோயாளிகள் புகார்

நோயாளிகள் புகார்

மருத்துவர் முறையாக சோதனை செய்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து எழுதிக் கொடுக்கிறார். ஆனால், மருத்துவமனையில் அந்த மருந்து ஸ்டாக் இல்லை என்றும், வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். எப்போது வரும் என்று கேட்டால், சரியான பதில் இல்லை..எனவே மருந்து தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நோயாளிகள் கூறியுள்ளனர்.

காற்று மூலம் பரவும் மெட்ராஸ் ஐ

காற்று மூலம் பரவும் மெட்ராஸ் ஐ

காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் அதிக அளவு பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காற்று மூலம் பரவும் என்றும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த நோய் பரவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்பார்வை பறிபோகும் அபாயம்

கண்பார்வை பறிபோகும் அபாயம்

மெட்ராஸ் ஐ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ், மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது. மெட்ராஸ் ஐ 5 நாட்களில் குணமடைய கூடியதுதான். அதேநேரத்தில் அலட்சியமாக இருந்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என கூறியுள்ளார்.

மருந்துகள் கையிருப்பு

மருந்துகள் கையிருப்பு

கண் சிவத்தல், அழற்சி போன்றவை சிர நேரங்களில் வேறு விதமான பாதிப்புகளாக இருக்கலாம். ஆகையால், அலட்சியம் காட்டாமல் கண் மருத்துதுவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையில் இருப்பில் உள்ளது. தட்டுப்பாடு ஏற்படவில்லை என்ற நிலை என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+