மறைக்கப்பட்ட வருமானம்.. கணக்கு காண்பிக்கப்படாத முதலீடுகள்? கே.என்.நேருவுக்கு பறந்த நோட்டீஸ்!
சென்னை: மறைக்கப்பட்ட வருமானம் மற்றும் கணக்கில் காண்பிக்கப்படாத முதலீடுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வருமான வரித்துறை வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கில் தற்போது வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. எனவே, கே.என்.நேரு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2013-2014 மற்றும் 201-2016 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளில் கே.என்.நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் முரண்பாடு இருப்பதாக கூறி, வருமான வரித்துறை குற்றம்சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வழக்கு?
கே.என்.நேரு தற்போது திருச்சி மேற்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் 2013-14 மற்றும் 2015-2016 காலங்களில், தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் முரண்பாடு இருப்பதாக வருமான வரித்துறை சந்தேகித்திருந்தது. ரூ.17 கோடி கணக்கில் காட்டப்பட்டாத வருமானம் மற்றும் ரூ.11.98 கோடி கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் இருந்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
நேருவின் சகோதரர் கே.என்.மணிவண்ணனுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டபோது, கைப்பற்றப்பட்ட டைரி, நோட்புக், பென்டிரைவ் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை வருமான வரித்துறை கூறியிருக்கிறது. கடந்த 2019ல் வருமான வரி அதிகாரிகள் வழங்கிய மறு மதிப்பீட்டை எதிர்த்து, கே.என்.நேரு மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, வருமான வரி ஆணையர் நேருவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை, அதே ஆண்டு டிச.3ம் தேதி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தற்போது மேல் முறையீடு செய்திருந்தார். இதற்குதான் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
