Vijay Puli: "நான் வரி ஏய்ப்பு செய்தேனா" என 2015ல் அறிக்கை வெளியிட்டாரே! விஜய் வழக்கின் பின்னணி என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ரூ 15 கோடி வரி ஏய்ப்புக்காக வருமான வரித் துறை ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதாவது புலி படம் வெளியாவதற்கு முன்பு இந்த சோதனை நடந்தது. அப்போது நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் புலி படத்திற்காக பெற்ற ஊதியத்தில் விஜய், ரூ 15 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இதை மறுத்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
விஜய் மறுப்பு அறிக்கை
"நான் வரி ஏய்ப்பு செய்தேனா, இல்லையா என்று விசாரிக்க எனது அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடத்தினர். எனது குடும்பத்தினரும் ஊழியர்களும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர். எனது வருமான வரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வழங்கினர்" என்று விஜய் 2015ம் ஆண்டு, அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் தனது வருமானத்தை மறைத்ததாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி விஜய்க்கு ரூ 1.50 கோடியை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ரூ 1.50 கோடி
இந்த நிலையில்தான் தற்போது இந்த வழக்கு இந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராமலிங்கம், இன்று தீர்ப்பை வாசித்தார். அதில் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதும், ஏற்கெனவே உயர்நீதிமன்றம் விதித்த ரூ 1.50 கோடி அபராதம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
தவெக கட்சி
தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், வரி ஏய்ப்பு செய்து அரசாங்கத்தை ஏமாற்றியது அப்பட்டமாக தீர்ப்பில் வெளிப்பட்டுவிட்டதால் வரும் தேர்தலில் அவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது: தவெக தூய சக்தி என்றும் தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன் என்றும் கூறியிருந்த விஜய்யின் தகிடுதத்தம் தற்போது வெளியாகிவிட்டது.
உச்சத்தை பார்த்தேன்
நான் உச்சத்தை பார்த்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்ததற்கு காரணம் பேர், பணம், புகழ் சம்பாதிக்க அல்ல என மீட்டிங்கிற்கு மீட்டிங் விஜய் பேசியது எந்த வாய்? வாய்க்கு வாய் கொள்கைத் தலைவர்கள் குறித்து சிலாகித்து பேசும் விஜய்யின் நேர்மை இதுதானா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அரசியல் நிபுணர்கள் கருத்து
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறி கட்சியை ஆரம்பித்த விஜய், தற்போது ஊழலை வேறு விதத்தில் அதாவது வரி ஏய்ப்பு என்ற முறையில் செய்துள்ளார். பெயர் எதுவாக இருந்தால் என்ன, ஊழல் ஊழல்தான், அரசாங்கத்தை ஏமாற்றியது ஏமாற்றியதுதான். ரூ 100 கோடி ஊதியம் வாங்கிய போதே வரி ஏய்ப்பு செய்தாரே, அரசியலுக்கு வந்தால் ஊதியமே லட்சங்களில்தான், அப்போது என்ன செய்வார் என கேள்வி எழுப்பினர்.
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications