அடங்கிய ஆசை.. முடிந்த மோகம்! மாமா குட்டியால் முடிந்த காதலியின் வாழ்க்கை! கொலைகாரனான 2கே கிட்!
சென்னை: ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் என்பார்கள் அப்படித்தான் ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரங்கேறி இருக்கிறது. காதலித்து திருமணம் செய்த மனைவியை நான்கே மாதங்களில் கொடூரமாக கொலை செய்திருக்கிறான் கணவன். இன்னொருவரிடம் மனைவி செல்போனில் பேசியதால் ஆத்திரத்தில் இந்த கொலை அரங்கேறி இருப்பதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் இளம் வயது சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் விவாகரத்து சம்பவங்களும் தொடர்கிறது. வயது ஈர்ப்பில் காதலித்து திருமணம் செய்துவிட்டு சில மாதங்களிலேயே அந்த உறவு கசந்தும் விடுகிறது.
ஆனால் கொலைவரை செல்லும் என யாதும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் சரணின் குடும்பத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தான் 20 வயதான சரண். இரண்டு வருடங்களாக அப்பகுரியைச் சேர்ந்த மதுமிதா என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

காதல் திருமணம்
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. காதல் வானில் சிறகடித்து பறந்தவர்கள் கணவன் மனைவியான பின் தான் பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு தனது ஆண் நண்பருடன் மதுமிதா தொடர்ந்து செல்போனில் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண் மதுமிதாவிடம் ஆண் நண்பரிடம் பேசக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் மதுமிதா ஆண் நண்பருடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.
மனைவி கொலை
இந்த நிலையில் நேற்று மனைவியிடம் நைசாக பேசிய சரண் ஒரத்தி அருகே இருக்கும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தன்னை கொலை செய்யத்தான் கணவன் அழைத்துச் செல்கிறான் என்பது மதுமிதாவுக்கு தெரியாது. யாரும் இல்லாத மலைப் பகுதிக்குச் சென்றபோது ஆண் நண்பருடன் பேசக் கூடாது என சரண் மதுமிதாவிடம் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த சரண் தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
கணவன் கைது
தொடர்ந்து அங்கிருந்து சென்று சிலாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயாரிடம் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கு
சரண் அப்பகுதியில் புள்ளிங்கோவாய் வளம் வந்ததும், அவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தற்போது கம்பி எண்ணி வருகிறார் 2கே கிட் சரண்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications