ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்தது தவெக.. மரகதம் குமரவேல், சத்யபாமா போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் போட்டியிட்டு ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது தவெக. அதாவது, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது தவெக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இருவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.

இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விஜய் இன்று வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.

Maduranthakam and Dharapuram by-elections TVK candidates announced those who resigned get the opportunity again

முதல்வர் விஜய் இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதி: எஸ். பரந்தாமன், தாராபுரம் (தனி) தொகுதி: எஸ். சுகன்யா ஆகியோர் களம் இறங்க உள்ளனர். அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

அதிமுக ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வென்ற தொகுதி என்பதால் கட்டாயம் வென்று தனது பலத்தை காட்ட எடப்படி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல, திமுகவும் இரண்டு தொகுதியிலும் வென்று தவெக அரசுக்கு தனது பதிலடியை தேர்தல் வெற்றியின் மூலம் கொடுக்க வியூகம் வகுத்து வருகிறது.

தவெகவை பொறுத்தவரை தனது 100 நாள் ஆட்சிக்கும் மக்கள் அளிக்கும் தீர்ப்பாக இந்த தேர்தல் முடிவு இருக்கும் என்பதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். கூட்ட்ணி கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியும்.. என கருதி வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால், சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய் அதிமுகவில் போட்டியிட்டு ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். அதாவது, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது தவெக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இருவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+