சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக்‌ஷன்".. கலெக்டர்களுக்கு பறந்த ஆர்டர்.. "ரிப்போர்ட் எங்கே?".. தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிரடி

இறையன்பு ஐஏஎஸ் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.. என்ன காரணம்? என்ன கடிதம்?

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இறையன்பு, மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களை இறையன்பு வலியுறுத்தியிருந்தார்..

குறிப்பாக, "75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு. அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு வேண்டாம்! தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு வேண்டாம்! தலைமைச் செயலாளர் இறையன்பு அட்வைஸ்

 Help line

Help line

அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.

 (Help line)

(Help line)

இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் (Help line) / ஒரு அலுவலரோ அறிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

 ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

"ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

லிஸ்ட்

லிஸ்ட்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தேன். சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

 எங்கே அறிக்கை?

எங்கே அறிக்கை?

எவ்வித சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும்விதமாக, மேலே பட்டியலிடப்பட்ட இடங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்தவும், மேற்படி பிரச்சினைகளைக் களைவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தேன். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்தான ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கடிதத்தில் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.

English summary
Major announcement by TN chief secretary Irai anbu IAS and wrote a letter to all the district collectors இறையன்பு ஐஏஎஸ் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X