சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலெக்டருக்கு கொரோனா ... தலையில்லா மனிதன் ஏற்படுத்திய பீதி.... .2020-ல் பரபரப்பான செங்கல்பட்டு!

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: கலெக்டருக்கு ஏற்பட்ட கொரோனா முதல் தலையில்லாத மனிதன் ஏற்படுத்திய பீதி வரை 2020-ல் செங்கல்பட்டு பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டது..

Recommended Video

    ரீவைண்ட் 2020 ... செங்கல்பட்டு டாப்-5..!

    நிவர் புயலால் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் முழு கொள்ளவை எட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

    செங்கல்பட்டு நகராட்சி பணியாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக நாய் வண்டியில் அழைத்து செல்லப்பட்டது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டாப் 5

    செங்கல்பட்டு டாப் 5

    நமக்கு பல சோதனைகளை கொடுத்த 2020-ம் ஆண்டு நிறைவடைந்து 2021-ம் ஆண்டு பிறக்க போகிறது. இந்த 2020-ம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 5 முக்கிய நிகழ்வுகளை பின்வருமாறு காணலாம்

    10 ஆண்டு சிறை

    10 ஆண்டு சிறை

    .2015-ம் ஆண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாபுரத்தில் சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு சிறப்பு சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை இந்த ஆண்டு விசாரித்த நீதிமன்றம் காளிதாஸுக்கு 10 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செங்கல்பட்டு மகளிர் போலீசார், நீதிமன்ற பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

    முழுமையாக நிரம்பின

    முழுமையாக நிரம்பின

    இரண்டாம் இடத்தை பிடித்தது செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள கொலவாய் ஏரி ஆகும். நிவர் புயலால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரிகள் 85% நிரம்பின. இந்த கொலவாய் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அங்கு இருந்து உபரிநீர் புலிப்பாக்கம் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.

    கலெக்டரையும் விட்டு வைக்கவில்லை

    கலெக்டரையும் விட்டு வைக்கவில்லை

    செங்கல்பட்டு மாவட்ட மக்களை பாடாய்படுத்திய கொரோனா, மாவட்ட கலெக்டரையும் விட்டு வைக்கவில்லை. அந்த மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பினார்.

    தலையில்லா மனிதன் ஏற்படுத்திய பீதி

    தலையில்லா மனிதன் ஏற்படுத்திய பீதி

    கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அந்த மாவட்ட மக்களை வேதனையில் ஆழ்த்தியது. அடுத்ததாக செங்கல்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியது தலை இல்லாமல் வந்த மனிதன்தான். என்னடா உளறுகிறாய்? அப்படினு சொல்றிங்களா.. தம்பரத்தில் கொரோனா பணியில் துரிதமாக ஈடுபட்ட அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், பத்திரிகை ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹாலோமென் உடை அணிந்து வந்த மதன்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்து டிராபிக் போலீசார் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து நன்றி தெரிவித்தார்.

    நாய் வண்டியில் அரசு ஊழியர்கள்

    நாய் வண்டியில் அரசு ஊழியர்கள்

    அந்த உடையில் அவர் தலையில்லாதவர்போல் இருந்ததால் பொதுமக்கள் திகைப்புக்கு உள்ளாயினர். போக்குவரத்து போலீசார் மதன்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். கடைசியாக 5-ம் இடத்தில் நாய் பிடிக்கும் வாகனத்தில் துப்புரவு பணியாளர்களை அழைத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் இடம் பிடித்துள்ளது.

    பொதுமக்கள் வேதனை

    பொதுமக்கள் வேதனை

    செங்கல்பட்டு நகராட்சி ஊழியர்கள் சிலரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாய் பிடிக்கும் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நகரை சுத்தம் செய்து, நோய்களை தடுத்து வரும் நிலையில் அவர்களை வாகனம் இல்லமால் நாய் வண்டியில் கூட்டி சென்றதால் மாவட்ட மக்கள் வேதனை அடைந்தனர். இவ்வாறு கலெக்டருக்கு கொரோனா முதல் தலையில்லாத மனிதன் ஏற்படுத்திய பீதி வரை செங்கல்பட்டு 2020-ஐ எதிர்கொண்டது.

    English summary
    From the corona to the collector to the panic caused by the headless man faced with various events in 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X