சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதகையில் உதிக்கும் உதயசூரியன்.. அதிமுக முக்கிய அமைச்சருக்கு கடும் போட்டி மாலை முரசு கருத்துக்கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இழுபறி நிலவுகிறது

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தல் தொடர்பாக மாலை முரசு செய்தி தொலைக்காட்சி 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

உதகையில் உதிக்கும் உதயசூரியன்.. அதிமுக முக்கிய அமைச்சருக்கு கடும் போட்டி மாலை முரசு கருத்துக்கணிப்புஉதகையில் உதிக்கும் உதயசூரியன்.. அதிமுக முக்கிய அமைச்சருக்கு கடும் போட்டி மாலை முரசு கருத்துக்கணிப்பு

அவிநாசியில் இழுபறி

அவிநாசியில் இழுபறி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் இழுபறி நிலவுவதாக மாலை முரசு தெரிவித்துள்ளது. அவிநாசி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 42% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் தலா 4 %, அமமுக 3% வாக்குகளை பெறும். மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக 41% வாக்குகளைப் பெற்று வெல்லும். திமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னிலை

திமுக முன்னிலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் அதிமுக 46% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம் 3% அமமுக 2% வாக்குகளை பெறும். கூடலூர் தொகுதியில் இழுபறி நிலவுகிறது. கூடலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 43% வாக்குகளை பெறும் அமமுக 5% நாம் தமிழர் 4 %, மக்கள் நீதி மய்யம் 1% வாக்குகளை பெறும். இங்கு பெரும்பாலான மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளதாக மாலை முரசு குறிப்பிட்டுள்ளது.

உதகை யாருக்கு

உதகை யாருக்கு

உதகை தொகுதியில் காங்கிஸ் (திமுக கூட்டணி) 46% வாக்குகளை பெறும். பாஜக (அதிமுக கூட்டணி) 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 6% நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம் 3% வாக்குகளை பெறும். ஈரோடு பவானிசாகர் தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் (திமுக கூட்டணி) 47% வாக்குகளை பெறுவார். அதிமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு கடும் போட்டி

செங்கோட்டையனுக்கு கடும் போட்டி

அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இழுபறி நிலவுகிறது. இங்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 42% வாக்குகளை பெறும். நாம் தமிழர் 5%, மக்கள் நீதி மய்யம் 3%, அமமுக 2% வாக்குகளை பெறும். அந்தியூர் தொகுதியில் திமுக 44% வாக்குகளை பெறும். அதிமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்று மாலை முரசு சர்வே தெரிவித்துள்ளது.

வெற்றி வாகை சூடும் கேசி கருப்பணன்

வெற்றி வாகை சூடும் கேசி கருப்பணன்

அதேபோல அமைச்சர் கேசி கருப்பணன் போட்டியிடும் பவானி தொகுதியில் அதிமுக 45% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் 5%, மக்கள் நீதி மய்யம் 3%, அமமுக 2% வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Malai Murasu reveals its opinion poll results of who gets the chance to win in Ooty and Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X