சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட மாவட்டங்களில் கடும் போட்டி... அதிமுகவிற்கு பூஸ்ட் கொடுக்கும் பாமக கூட்டணி... மாலை முரசு சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: மாலை முரசு கருத்துக்கணிப்பில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

மாலை முரசு செய்தி தொலைக்காட்சி இந்த 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

50 தொகுதிகளில் சர்வே.. 42ல் திமுகதான் மகுடம் சூடும்.. 5ல் மட்டுமே அதிமுக.. தந்தி டிவி பரபர கணிப்பு!50 தொகுதிகளில் சர்வே.. 42ல் திமுகதான் மகுடம் சூடும்.. 5ல் மட்டுமே அதிமுக.. தந்தி டிவி பரபர கணிப்பு!

கள்ளக்குறிச்சியில் திமுக ஆதிக்கம்

கள்ளக்குறிச்சியில் திமுக ஆதிக்கம்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். சங்கராபுரம் தொகுதியில் திமுக 47% வாக்குகளையும் அதிமுக 40% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக 42% வாக்குகளை பெறும். அதிமுக 36% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். அமமுக சுமார் 11% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு தெரிவித்துள்ளது. அதேபோல உளுந்தூர்பேட்டையில் திமுக 42% வாக்குகளை பெற்று வெல்லும். அதிமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும்.

பொன்முடி தொகுதியில் என்ன நிலவரம்

பொன்முடி தொகுதியில் என்ன நிலவரம்

திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான பொன்முடி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இந்தத் தேர்தலில் திமுக 47% வாக்குகளை பெறுவார் என்று மாலை முரசு தெரிவித்துள்ளது. இங்கு பாஜக (அதிமுக+) 37% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். விக்கரவாண்டி தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 42% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும்.

அதிமுக வெல்லும்

அதிமுக வெல்லும்

திண்டிவனம் தொகுதியில் அதிமுக 43% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 40% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். மைலம் தொகுதியில் திமுக 49% வாக்குகளை பெறும். அதிமுக 39% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். செஞ்சி தொகுதியில் திமுக 42% வாக்குகளை பெற்று வெல்லும். அதிமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும் என்று மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது,

கடும் போட்டி

கடும் போட்டி

இன்று கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஒன்பது தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெல்லும் என்று மாலை முரசு கூறியுள்ளது. வட மாவட்டங்களில் பல்வேறு தொகுதிகளிலும் பாமக வாக்குகள் அப்படியே அதிமுகவிற்கு வருவதால் இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

English summary
Malai murasu opinion polls in Kallakkurichi and villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X