அம்பத்தூர் நிறுவனத்தில் பெண்களிடம் அத்துமீறிய மேலாளர்.. பாலியல் வழக்கில் குட்டு வைத்த நீதிமன்றம்
சென்னை: அம்பத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர்களிடம், நிறுவனத்தின் மேலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பெண்கள் விரும்பாத செயல்கள் மட்டுமல்ல, சொற்களை கூறுவது கூட பாலியல் அத்துமீறல்தான்" என்று கூறியிருக்கிறது.
அம்பத்தூரில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்க்கொண்டிருக்கின்றன. இது குறித்து தங்களது மேலாளர் மீது 3 பெண் ஊழியர்கள் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மேலாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் எந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாலும் அவருக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கொடுக்க கூடாது என்றும் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைகளை எதிர்த்த மேனேஜர், தொழிலாளர் நலத்துறையில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், "எனது தரப்பு நியாயத்தை நிர்வாகம் கேட்கவில்லை. ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார். இதனையடுத்து நிர்வாகத்தின் பரிந்துரையை ரத்து செய்து நலத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் நாடியிருந்தது. தொழிலாளர் நலத்துறையால் தங்களது பரிந்துரை நீக்கப்பட்டது தவறு என்றும், தாங்கள் எடுத்த நடவடிக்கையை சரி என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் கோரியிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் இன்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பணியிடத்தில் பெண்கள் விரும்பாத, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்வது மட்டுமல்ல, அவர்களை அப்படி உணர வைக்கும் வகையில் பேசுவதும் கூட பாலியல் துன்புறுத்தல்தான். எனவே, சம்பந்தப்பட்ட மேனேஜருக்கு எதிராக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் செல்லும். நிர்வாகத்தின் பரிந்துரையும் செல்லும்" என்று கூறி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தற்போது தொழிலாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த உத்தரவின் மூலமாவது இனியும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications