சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக வாக்குகள்... அடித்து நொறுக்கிய ஐபி.. 3வது இடத்தில் எடப்பாடியார்.. 5வது இடத்தில் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றி உள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி உள்ளன.

Recommended Video

    சென்னை: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள்... மாஸ் காட்டிய டாப் 10 வேட்பாளர்களின் பட்டியல்!

    மறைந்த கருணாநிதி முதல் பிஎச் பாண்டியன் வரை.. சட்டசபையை அலங்கரிக்கும் வாரிசுகள். முழு விவரம்! மறைந்த கருணாநிதி முதல் பிஎச் பாண்டியன் வரை.. சட்டசபையை அலங்கரிக்கும் வாரிசுகள். முழு விவரம்!

    மொத்தமாக தமிழக சட்டசபை தேர்தலில் 3994 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் சிலர் ஸ்டார் வேட்பாளர்கள். நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தாலும், சிலர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

    அடித்து நொருக்கிய ஐ.பெரியசாமி

    அடித்து நொருக்கிய ஐ.பெரியசாமி

    இவர்களில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தான் தமிழகத்திலேயே மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். இவர், 1,34,082 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

    3 வது இடத்தில் எடப்பாடியார்

    3 வது இடத்தில் எடப்பாடியார்

    இவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு தான். இவர் 94, 673 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி இடம்பெற்றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, 93,802 ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

     ஸ்டாலினுக்கு ஐந்தாவது இடம்

    ஸ்டாலினுக்கு ஐந்தாவது இடம்

    இந்த பட்டியலில் நான்காவதாக இடம்பிடித்துள்ளவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு. இவர் 81,283 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர்களைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,000 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதிக ஓட்டுக்களை அள்ளிய திமுக

    அதிக ஓட்டுக்களை அள்ளிய திமுக

    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 50,310 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 53,797 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சுழி தொகுதியில் திமுக.,வின் தங்கம் தென்னரசு 60,992 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    கோவையை கைப்பற்றிய அதிமுக

    கோவையை கைப்பற்றிய அதிமுக

    கோவை மாவட்டத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அமைச்சர் வேலுமணி உள்ளார். இவர் 41,630 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர்களில் பலர் 40,000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Marginal vote winning candidates in tamil nadu assembly election 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X