மாரிமுத்து மரணம்.. மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா? Echo/ECG பரிசோதனை மட்டும் போதுமா?
சென்னை: நடிகர் மாரிமுத்து உள்பட பலரும் மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே கவலையுடன் சேர்த்து அச்சத்தையும் தருகிறது. மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா? பொதுவாக மாரடைப்பு அறிய Echo/ECG போன்ற பரிசோதனைகள் போதுமா?
பொதுவாக மாரடைப்பு அறிய Echo/ECG போன்ற பரிசோதனைகள் போதுமா? நமக்கே தெரியாம இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு கண்டறிய ஆஞ்சியோ தான் செய்யணுமா? இதற்காகவே நம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு ஆரம்பித்த TMT பேக்கேஜ் பரிசோதனை உள்ளது.
மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா?
— Govt Omandurar wholebody checkup (@AmmaMHC) September 8, 2023
Echo/ECG போன்ற பரிசோதனைகள் போதுமா?
நமக்கே தெரியாம இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு கண்டறிய ஆஞ்சியோ தான் செய்யணுமா?
இதற்காகவே நம் அரசு மருத்துவமனைல பொதுமக்களுக்கு ஆரம்பித்த TMT பேக்கேஜ் பரிசோதனை🙏 pic.twitter.com/ckFeSf3cW8
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு உயர்தர மருத்துவமனையில் ஓமந்தூரார் முழு உடல் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. ஏன் இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நாட்டிலேயே எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வசதி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் முழு உடல் பரிசோதனைகள் மிக குறைந்த கட்டணத்தில் இங்கு தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொருவரும் இதை அறிந்து கொண்டால் உடலில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே அறிய முடியும்.
சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 48900 பேர் மருத்துவ பரிசோதனையால் பயன் அடைந்துள்ளனர்.
ஓமந்தூராரர் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தொடங்கப்பட்டது.
கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் பிளஸ் என 4 வகை பரிசோதனைகள் முறையே ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரத்த பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல்,இசிஜி, அல்டரா சவுண்ட், தைராய்டு, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், எழும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டறியும் டிரெட்மில் பரிசோதனைகள் என 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டிலேயே வேறு எந்த அரசு மருத்துவனையிலும் இல்லாத வகையில் அதி நவீன கட்டமைப்புடன் இந்தப் பரிசோதனை மையம் அமைந்திருப்பதால், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதுவரை 1800 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு டிரெட் மில் பரிசோதனைகள் என மொத்தம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலேயே முதன் முறையாக கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்கள் கர்ப்பிணிகளுக்காக பிரத்யேமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.1000 மற்றும் ரூ.2000 ஆகிய இரு வகையான பரிசோதனைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை 400க்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது, ஓமந்தூரர் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்துக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கு இங்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதே இதற்கு காரணம்,. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத சில உயர் மருத்துவ உபகரணங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அடுத்தகட்டமாக கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணங்கள் மற்றும் மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை 1.50 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பபட்டு அதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மாரடைப்பை தடுக்க பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என ஓமந்தூரர் அரசு மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications