தோசை சுடுவதை வைத்து ஜாதியை கண்டுபிடிக்கலாம் என்ற மதிமாறன்.. தெறிக்கவிடும் நெட்டிசன்கள்
சென்னை: தோசை சுடுவதை வைத்தே ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் என சமீபத்தில் காரைக்குடியில் 'பகுத்தறிவாளர் கழகம்' நடத்திய கூட்டத்தில்
சமூக செயற்பாட்டாளரும், பெரியாரிஸ்டுமான, தோழர் வே.மதிமாறன் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
மதிமாறன் இவ்வாறாக அனைத்து விஷயங்களிலும் ஜாதியை புகுத்தி பேசுவது புதிது கிடையாதுதான். இருப்பினும், இம்முறை தோசை மெல்லிசாக இருந்தால் அது பிராமண குடும்பத்தினர் சுடுவது, தடியாக இருந்தால் அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக பெண்கள் சுடுவது என்று பேசியிருந்தார் மதிமாறன்.
விவசாய வேலைக்கு போய்விட்டு அவசரத்தில் சுடுவதால் எதையோ ஒன்றை சுட்டால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பெண்கள் தோசையை தடிமனாக சுடுவதில் ஆச்சரியம் இல்லை என்பது அவரது உட்கருத்து. ஆனால், பொருளாதார நிலையை வைத்து இதை சொல்லாமல் ஜாதியை வைத்து வழக்கம்போல பேசியதால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். மதிமாறன் இவ்வாறு பேசுவது பெரியாரிசத்தை வலுவிழக்க செய்யும் என்பது பெரியாரிஸ்ட் பலரின் கருத்தாக உள்ளது.
|
பரோட்டாவே போதும்
காது ஆடுவதை வைத்து ஜாதியை கண்டுபிடிக்கும், கதாப்பாத்திரமாக, சாமி திரைப்படத்தில், பெருமாள் பிச்சை வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போது எந்த தோசை சாப்பிடுகிறார்கள் என்பதை வைத்து, ஜாதியை கண்டுபிடித்துவிடுவார்கள் என கிண்டல் செய்கிறது இந்த ட்வீட். எனவே பரோட்டா என்று சொல்லி நகர்வதே நல்லது என்கிறது இந்த ட்வீட்.
|
பசி வேறென்ன
மதிமாறன் நல்ல பசியில் இருந்திருப்பார், அதனால்தான் பேசச் சொன்னபோது, தோசை பற்றி பேசியிருப்பார் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
|
ஓ.. இதுதான் வர்ணாசிரமமா
வர்ணாசிரமம் என்கிறார்களே, அப்போ வண்ண வண்ணமாக தோசை சுடுவதைத்தான் அப்படி சொல்கிறார்களோ, என்பதை போல மீம் போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
இனி இப்படித்தான்
இப்படி தோசையில் ஜாதி பார்த்தால், நாளை சாப்பிட போகும் இடங்களில் இப்படியும் போர்டுகள் வைக்கப்பட வாய்ப்புள்ளது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
|
திராவிட தோசை
அண்ணனுக்கு ஒரு திராவிட தோசை பாஆஆர்சல்.. இப்படி கேட்கும்போதே நல்லா இருக்குல்ல. அதைத்தான் சொல்கிறது இந்த வடிவேலு திரைப்பட காட்சி மீம்.
|
99 வரைட்டி தோசைகள் என்ன ஜாதி
99 வரைட்டி தோசை என்றெல்லாம் பல வகை தோசைகளை நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதை பார்க்கலாம். இனிமேல் இத்தனை வரைட்டிக்கும் ஜாதி என்ன என்பதை கண்டுபிடிக்கும் வேலை நமக்கு உள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications